0 Comments
Published on: Thursday, July 23rd, 2020 at 10:07 PM
நடிகை வனிதா புகாரில் கைது செய்யப்பட்ட சூர்யாதேவி… அடுத்த சில மணி நேரங்களில் நடந்த திருப்பங்கள்…!
நடிகை வனிதா குறித்து அவதூறு பரப்பியதாக யூடியூப்பர் சூர்யா தேவி கைது செய்யப்பட்ட நிலையில், நடிகைகள் கஸ்தூரி, லட்சுமி ராமகிருஷ்ணன் மீதும் வனிதா புகார் அளித்துள்ளார்.
பிரபல நடிகையான வனிதா, தனது யூடியூப் சேனலில் பணிபுரிந்த பீட்டர் பால் என்பவரை அண்மையில் திருமணம் செய்து கொண்டார். பீட்டர் பாலின் மனைவி எலிசபெத், தன்னிடம் விவாகரத்து வாங்காமல் திருமணம் செய்ததாக காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பிறகு எலிசபெத்தும் வனிதாவும் யூடியூப் மூலம் பரஸ்பரம் விளக்கம் கொடுக்கக் தொடங்கி, பின்னர் இருவரும் காரசாரமாக மாறி மாறி திட்டிக்கொள்ளத் தொடங்கினர். இந்த விவகாரத்தில் பலரும் வீடியோக்களை பதிவிட்டு கருத்துக்களை தெரிவித்தனர்.
எலிசபெத்திற்கு ஆதரவாகவும், வனிதாவுக்கு எதிராகவும், வனிதா ஸ்டைலிலேயே யூடியூப்பில் தன் பெயரில் தனி சேனல் நடத்தி வரும் சூர்யா தேவி மூக்கை நுழைத்து கருத்து தெரிவிக்கத் தொடங்கினார். நடிகை வனிதாவின் திருமணத்தைப் பற்றியும், நடிகை வனிதா பற்றியும் தனிப்பட்ட வகையில் பல்வேறு கருத்துக்களை வீடியோவாக வெளியிட்டு வந்தார்.
வனிதாவும் சூர்யாதேவிக்கு பதிலளிக்கும் வகையில் பல்வேறு வீடியோக்களை வெளியிட்டு பார்வையாளர்களின் காதில் ரத்தம் சொட்ட வைத்தார். ஆனால் வீடியோக்களில் சூர்யாதேவி தரக்குறைவாக பேசி அவதூறு பரப்புவதாகவும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும் போரூர் காவல்நிலையத்தில் சூர்யா தேவி மீது புகார் ஒன்றை அளித்தார். அவதூறு பரப்புவது, கொலை மிரட்டல் விடுப்பதாகவும் கூறி புகார் அளித்திருந்தார். மேலும் வடபழனி காவல்நிலையத்தில் நடிகை வனிதா மீது சூர்யா தேவியும் புகார் அளித்தார். இரு தரப்பு புகார்களையும் வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை செய்து வந்தனர்.
கடந்த வாரம் நடிகை வனிதாவையும், சூர்யா தேவியையும் போலீசார் அழைத்து விசாரணை செய்தனர். தனிமனித அவதூறு பரப்பும் வகையில் வீடியோக்களை பதிவிட வேண்டாம் என இருவரிடமும் போலீசார் அறிவுறுத்தினர். மேலும், பிலபலங்கள் மீது அவதூறாக வீடியோ வெளியிட்டு விளம்பரம் தேடி முயற்சிக்கக்கூடாது என சூர்யாதேவிக்கு எச்சரிக்கையும் விடுத்தனர்.
அப்போது அடங்க மறுத்த சூர்யா தேவி தொடர்ந்து நடிகை வனிதா மீது வசைமாறி பொழிந்தார். சர்ச்சைக்குரிய வீடியோக்களையும் வெளியிட்டு வந்தார். இதனால் பெண்ணை ஆபாசமாக திட்டுதல் மற்றும் கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் சூர்யா தேவி மீது வடபழனி அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
ஏற்கனவே தமிழக பாஜக தலைவராக தமிழிசை இருந்தபோது, அவரை அவதூறாக பேசிய வழக்கை கைதான நிலையில், மீண்டும் சூர்யா தேவி கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்ட சில மணி நேரங்களில், நடிகைகள் கஸ்தூரி மற்றும் லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு எதிராகவும் நடிகை வனிதா வடபழனி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் தன்னை பற்றி அவதூறு கருத்துகளை பேசி வருவதாக அந்த புகாரில் வனிதா கூறியுள்ளார். கஸ்தூரி, லட்சுமி ராமகிருஷ்ணன் மீதான வனிதாவின் புகாரை விசாரிப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, சூர்யாதேவியை விசாரித்த போலீசார், சில மணி நேரங்களிலேயே போலீஸ் நிலைய ஜாமினில் விடுவித்தனர். இதனால் வனிதா மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
No comments yet