0 Comments
Published on: Sunday, July 19th, 2020 at 10:36 AM
அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளைஞர் யார் தெரியுமா? அவரே தான்…!
நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளைஞரை கைது செய்த போலீசார், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையை அடுத்த ஈஞ்சம்பாக்கத்தில் நடிகர் அஜித்குமாரின் வீடு உள்ளது. இங்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று பிற்பகலில் மர்ம நபர் ஒருவர் தொலைபேசியில் தெரிவித்தார். இந்த தகவலை உடனடியாக அஜித்குமாரின் மேலாளருக்கு தெரிவித்த போலீசார், வெடிகுண்டு நிபுணர்களை வரவழைத்து, அஜித் வீட்டில் சோதனை நடத்தினர்.
5 பேர் கொண்ட வெடிகுண்டு நிபுணர்கள் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக நடத்திய சோதனையில், வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என உறுதி செய்தனர். இதையடுத்து, மர்ம நபர் குறித்து விசாரணை மேற்கொண்டனர். காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு வந்த அழைப்பு, விழுப்புரத்தில் இருந்து வந்ததை உறுதி செய்த போலீசார், செல்போன் சிக்னலை வைத்து துப்பு துலக்கினர்.
இந்த தகவலை விழுப்புரம் போலீசாருக்கு தெரிவித்ததை அடுத்து, அவர்கள் மரக்காணத்தைச் சேர்ந்த புவனேஸ்வரன் என்ற 20 வயது இளைஞரை கைது செய்தனர். சென்னைக்கு அழைத்து வரப்பட்ட அந்த இளைஞரைப் பார்த்து, நீலாங்கரை போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். ஏனெனில், கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரும் இவர்தான்.
இவரது செயல்பாடுகள் சைக்கோபோல இருப்பதால், அவரை கைது செய்த போலீசார், விஜய் வீட்டைத் தொடர்ந்து, அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது ஏன் என விசாரித்து வருகின்றனர்.
No comments yet