Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

11 பெண்களிடம்… சிறுமியால் சிக்கிய இளைஞர்..!

0 Comments

Published on: Tuesday, January 7th, 2020 at 7:07 PM

சென்னையில் 11 பெண்களிடம் தொடர்பு வைத்திருந்த இளைஞர் ஒருவர், சிறுமியை ஆபாச படம் எடுத்து மிரட்டியதன் மூலம் போலீசாரிடம் சிக்கியுள்ளார்.

சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவரை ஆபாச படமெடுத்து வைத்து கொண்டு அதனை காட்டி சிறுமியிடம் வாலிபர் ஒருவர் பணம் கேட்டு மிரட்டுவதாக வண்ணாரப்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து வண்ணாரப்பேட்டை போலீசார் பல இடங்களில் விசாரணை மேற்கொண்டு சிறுமியிடம் பணம் கேட்டு மிரட்டிய வாலிபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிடிபட்ட நபரின் பெயர் சாய் என்கிற சிவசுந்தரம் இவர் பிடெக் பட்டதாரி இவரிடம் இருந்து 3 செல்போன்கள் மற்றும் ஒரு லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டது. லேப்டாப் மற்றும் செல்போனை சோதனை செய்ததில் சிறுமி மட்டுமில்லாமல் மேலும் 11 பெண்களை மிரட்டி சாய் பணம் பறிக்க முயன்றுள்ளதும் தெரியவந்துள்ளது. மேலும் இதுபோன்ற வேறுயாரிடமாவது பணம் பறித்துள்ளாரா? எனவும் வண்ணாரப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குபதிவு செய்த வண்ணாரப்பேட்டை போலீசார் சாயிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet