0 Comments
Published on: Monday, July 13th, 2020 at 10:11 AM
90ஸ் கிட்ஸ் சாபத்தில் விழுந்த இளைஞர்… ஒரே மேடையில் 2 பெண்களை திருமணம் செய்த தைரியம்…
பெற்றோர் பேச்சை மீறாத இளைஞர் ஒருவர், காதலியையும் கைவிட மணமில்லாமல் ஒரே மேடையில் இரண்டு பெண்களை கரம்பிடித்துள்ள ஆச்சர்ய சம்பவம் அரங்கேறியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் பெதுல் மாவட்டத்தின் கெரியா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தீப். பெற்றோரின் செல்லப்பிள்ளையான இவர், பெண் ஒருவரை காதலித்து வந்தார். இதையறியாத பெற்றோர் வேறு ஒரு பெண்ணை மகனுக்கு நிச்சயம் செய்தனர். இதை அறிந்த சந்தீப், தான் வேறு ஒரு பெண்ணை காதலிக்கும் விசயத்தை பெற்றோரிடம் கூறியுள்ளார்.
ஆனால், பெற்றோரோ நிச்சயம் செய்த பெண்ணையே திருமணம் செய்ய வேண்டும் என கண்டிப்பாக கூறியுள்ளனர். இதனால், காதலியை கைவிட மணமில்லாத இளைஞர், இரு பெண்களையும் திருமணம் செய்துகொள்வதாக கூறினார். உற்றார் உறவினர்கள் புடைசூழ ஒரே மண மேடையில் இரு பெண்களையும் கரம்பிடித்தார் சந்தீப்.
இந்த திருமணத்துக்கு இரண்டு பெண்களுமே சம்மதம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் விசாரித்தபோது, பெண்கள் இருவருக்கும் சம்மதம் என்பதால் எந்த புகாரும் எழவில்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
No comments yet