0 Comments
Published on: Saturday, May 23rd, 2020 at 7:19 PM
10 ஆண்டுக்கு Work from Home தான் – அதிரடி அறிவிப்பை வெளியிட்ட பேஸ்புக்…
பேஸ்புக் ஊழியர்கள் பெரும்பாலானோர் அடுத்த 5 முதல் 10 ஆண்டுகள் வரை வீட்டில் இருந்தே பணியாற்றுவர்கள் என அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜூக்கர் பெர்க் தெரிவித்துள்ளார்.
கொரோனா ஊரடங்கு காரணமாக உலகில் உள்ள பெரும்பாலான நிறுவனங்களின் ஊழியர்கள், வீட்டிலிருந்தே பணியாற்றி வருகின்றனர். கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததும் அவர்கள் மீண்டும் அலுவலகத்திற்கு செல்ல வேண்டியிருக்கும்.
இந்நிலையில், உலகின் மிகப் பெரிய சமூக வலைதளமான பேஸ்புக் நிறுவனத்தின் ஊழியர்கள் கடந்த 2 மாதங்களாக அலுவலகத்திற்கு வராமல் வீட்டிலிருந்தே பணிபுரிகின்றனர். இதையடுத்து, கொரோனா தொற்றால் ஊழியர்கள் பாதிக்கப்படாமல் இருக்க 5 அல்லது 10 ஆண்டுகள் வரை வீட்டில் இருந்தே பணியாற்றுவார்கள் என மார்க் ஜூக்கர் பெர்க் தெரிவித்துள்ளார்.
பேஸ்புக் நிறுவனத்தில் தற்போது சுமார் ஒரு லட்சம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். தற்போது மார்க் ஜூக்கர் பெர்க் கூறியுள்ளதை பார்க்கும்போது, சுமார் 48 ஆயிரம் ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய வாய்ப்பு உள்ளது.
No comments yet