Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கட்டிய மனைவியை நண்பனுக்கு விருந்து படைத்த காமக் கொடூரன்… கை, கால்களை கட்டிப்போட்டு கதறக் கதற…

0 Comments

Published on: Wednesday, December 4th, 2019 at 8:32 PM

ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் கதிரியில் உள்ள சோமேஷ் நகரில் வசித்து வரும் மல்லேஷ்க்கும் சித்தக்கூறு கிராமத்தை சேர்ந்த ஈஸ்வரிக்கும் 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மல்லேஷ் மேஸ்திரியாக வேலை செய்யும் நிலையில் தினந்தோறும் மது அருந்தி வந்து வீட்டில் சண்டை போடுவது வழக்கம்.

2 நாட்களுக்கு முன்பு மது அருந்திய மல்லேஷ், அதே பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்ற நண்பனையும் வீட்டிற்கு அழைத்து வந்தார். மதுபோதையில் இருந்த இருவரும் ஈஸ்வரியின் கை, கால்களை கட்டியுள்ளனர். பின்னர், அவரது உடைகளை களைந்து, மாறி மாறி இருவரும் கதறக் கதற கற்பழித்துள்ளனர்.

ஈஸ்வரி சத்தம் போட்டதால், அவரை அடித்து உதைத்தபடியே இருவரும் இரவு முழுவதும் கற்பழித்துள்ளனர். நண்பனுடன் சேர்ந்து கணவன் செய்த கொடூரத்தை வெளியே சொல்ல முடியாத ஈஸ்வரி, சித்தக்கூறில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு சென்றார்.

வீட்டுக்கு வந்தது முதல் மகள் மனவேதனையில் இருப்பதை உணர்ந்த தாய், ஈஸ்வரியிடம் கேட்டபோது, அவர் நடந்த விவரங்களை கூறினார். இதையடுத்து, தாயின் அறிவுறுத்தலின்பேரில், சித்தக்கூறு காவல் நிலையத்தில் பொதுமக்களுடன் இணைந்து ஈஸ்வரி புகார் அளித்தார். இந்த புகாரை வைத்து போலீசார் கதிரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

பின்னர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த மல்லேஷ் மற்றும் விஜயகுமாரை போலீசார் கைது செய்தனர். மனைவி குழந்தைகளையும் கண்ணுக்கு கண்ணாக பார்த்துக்கொள்ள வேண்டிய கணவனே நண்பனுடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்தது, போதையால் வாழ்க்கைப் பாதை எவ்வாறு தடம் புரள்கிறது என்பதையே காட்டுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet