Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கள்ளக்காதலியுடன் சென்ற தந்தை – டாடி டாடி என கதறிய குழந்தை… சிறிதுநேரத்தில் நிகழ்ந்த சோகம்…

0 Comments

Published on: Thursday, July 23rd, 2020 at 8:10 PM

கள்ளக்காதலியுடன் சென்ற தந்தை – டாடி டாடி என கதறிய குழந்தை… சிறிதுநேரத்தில் நிகழ்ந்த சோகம்…

திருப்பதியில் காதல் மனைவி மற்றும் குழந்தையை நடு ரோட்டில் தவிக்கவிட்டுவிட்டு கள்ளக்காதலியுடன் கணவன் சென்ற காட்சி கண்ணீரை வரவழைக்கிறது.

ஆந்திர மாநிலம், திருப்பதி  சின்னகாப்பு வீதியைச் சேர்ந்தவர்  வெங்கடாசலம். தக்காளி வியாபாரியான இவர் சரஸ்வதி என்பவரை கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 8 வயதில் பெண் குழந்தை இருக்கிறது.

மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த இவர்கள் வாழ்க்கையில் புயல்போல் பெண் ஒருவர் புகுந்ததால், அந்த குடும்பமே இன்று சின்னாபின்னமாகி விட்டது. புதிதாக ஒரு பெண்ணுடன் வெங்கடாசலத்திற்கு ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. அந்த பெண் கர்ப்பமான நிலையில்,  வீட்டுக்கு வருவதை வெங்டாசலம் தவிர்த்துள்ளார்.

ஒரு கட்டத்தில் மனைவி மற்றும் குழந்தையை தவிக்கவிட்டு, அந்த பெண்ணுடனே தனியாக வீடு எடுத்து குடும்பம் நடத்தத் தொடங்கினார் வெங்கடாசலம். இதனால் ஆதரவற்ற நிலையில் இருந்த சரஸ்வதி, தனது கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி, திருப்பதி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் விசாரணைக்காக வெங்கடாசலத்தை போலீசார் காவல்நிலையத்திற்கு வரவழைத்தனர். அப்போது, அவரது கள்ளக்காதலியும் காவல்நிலையத்திற்கு வந்துள்ளார். இருவரும் விசாரணைக்கு வந்த தகவல் அறிந்து சரஸ்வதி தனது மகளுடன் கிழக்கு காவல்நிலையம் சென்றுள்ளார். விசாரணை முடித்து தனது கள்ளக்காதலியுடன் வெங்கடாசலம் வெளியில் வரும்போது, நியாயம் கேட்டு சரஸ்வதி தகராறில் ஈடுபட்டார்.

சரஸ்வதியின் கதறலை காது கொடுத்து கேட்காத காதல் கணவன் வெங்கடாசலம், கள்ளக்காதலியுடன் இருசக்கர வாகனத்தில் தப்பிச் செல்ல முயன்றார். ஆனால் அவரின் பைக்கை எடுக்க விடாமல் சரஸ்வதி தகராறில் ஈடுபட்டார். இதனால் அந்த பகுதியே களேபரமானது. ஒரு கட்டத்தில் சரஸ்வதியிடம் இருந்து தப்பிய வெங்கடாசலம், கள்ளக்காதலியுடன் இருசக்கர வாகனத்தில் மின்னல் வேகத்தில் சென்றுவிட்டார். அவரை பின்னால் துரத்திச் சென்ற மனைவி சரஸ்வதி செறுப்பை எடுத்து வீசி தாக்கினார்.

தந்தையை பின்தொடர்ந்து டாடி… டாடி… என அந்த சிறுமி கத்திக்கொண்டு ஓடிய காட்சி காண்போரை கண்கலங்க வைத்தது. இருப்பினும், கைவிட்டு சென்ற கணவரை தன்னுடன் சேர்த்து வைக்கக்கோரி காவல்நிலையம் முன்பு, சாலையில் அமர்ந்து சரஸ்வதி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது ஆவேசமடைந்த சிறுமி, இனிமேல் அந்த தந்தை தனக்கு வேண்டாம் என்றும், அவருடைய செல்போன் எண்ணை, தாயின் செல்போனில் இருந்து அழிக்குமாறும் கூறினார்.

அங்கு வந்த கிழக்கு காவல் நிலைய போலீசார், மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கும் படி கூறி சமாதானப்படுத்தி அனுப்பினர். மகளிர் காவல் நிலையத்திற்கு சென்ற சரஸ்வதி நீண்ட நேர காத்திருப்புக்கு பின்னர் புகார் அளித்தார்.  புகாரை பெற்ற போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர்.

காதலித்து திருமணம் செய்த நபர், கள்ளக்காதலிக்காக பெற்ற குழந்தையைக் கூட அம்போவென விட்டுச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு, வெங்கடாசலத்திற்கு பலரது பாவத்தையும் சேர்த்துள்ளது என்றே சொல்ல வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet