Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

எஸ்.ஐ. உடன் கள்ளத்தொடர்பு – நாடு திரும்பிய கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

0 Comments

Published on: Tuesday, January 7th, 2020 at 7:00 PM

 

காவல் உதவி ஆய்வாளருடன் கள்ளத்தொடர்பில் உள்ள மனைவி, அவருடன் கூட்டு சேர்ந்து கோடிக்கணக்கான ரூபாய் சொத்தை அபகரிப்பதாக கணவன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

சென்னை கேகே நகரைச் சேர்ந்தவர் ஜனார்த்தனன். இவருக்கு நர்மதா என்பவருடன் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது.இவர் சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வருகிறார்.வெளிநாடு வாழ் இந்தியராக இருக்கும் ஜனார்த்தனன்,கடந்த 2019 மே மாதம் வீட்டுக்கு திரும்பி உள்ளார். இந்தநிலையில் தனது மனைவிக்கும் திருநின்றவூர் காவல் உதவி ஆய்வாளர் ராஜேஷ் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாகவும் அதை பலமுறை தட்டி கேட்பதற்கு காவல் உதவி ஆய்வாளர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிவித்தார்.

 

இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை ராயலா நகர் அருகே உள்ள பூங்கா ஒன்றில் தனது மனைவியும் உதவி ஆய்வாளர் ராஜேஷ் என்பவரும் ஒன்றாக சந்தித்துக்கொண்ட போது அவர்களை பின் தொடர்ந்து புகைப்படம் எடுத்ததாகவும் இதனை பார்த்த உதவி ஆய்வாளர் சாலையில் வைத்து மிகக் கடுமையாக தாக்கியதாகவும் தெரிவித்தார்.மேலும் தன் குழந்தைகள் மீது வாங்கிய 5 கோடி ரூபாய் சொத்துக்களை மனைவி உதவி ஆய்வாளருடன் சேர்ந்து அபகரித்துள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து ராயலா நகர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், காவல் உதவி ஆய்வாளர் மீது ஏற்கனவே அசோக் நகர், தி.நகர் ஆகிய காவல் நிலையங்களில் புகார் கொடுத்ததாகவும் ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார். இதனால் சென்னை காவல் ஆணையரை சந்தித்து நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளித்துள்ளதாக ஜனார்த்தனன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet