Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

மருந்து வந்தாலும் கொரோனா பிரச்சனை தீராது – அதிர்ச்சியை கிளப்பும் உலக சுகாதார அமைப்பு…

0 Comments

Published on: Tuesday, August 4th, 2020 at 9:16 PM

மருந்து வந்தாலும் கொரோனா பிரச்சனை தீராது – அதிர்ச்சியை கிளப்பும் உலக சுகாதார அமைப்பு…

தடுப்பு மருந்து வந்தாலும் கொரோனா பிரச்சனை முடிவுக்கு வருவது கஷ்டம்தான் என உலக சுகாதார அமைப்பு கூறியிருப்பது கடும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் ஒரு கோடியே 84 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 6 லட்சத்து 96 ஆயிரம் பேர் மரணமடைந்துள்ளனர். அமெரிக்காவில் மட்டும் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50 லட்சத்தை நெருங்கி வருகிறது. அங்கு இதுவரை ஒரு லட்சத்து 58 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

பிரேசிலில் 27 லட்சத்து 51 பேரும், ரஷ்யாவில் 8 லட்சத்து 56 ஆயிரம் பேரும், தென்னாப்பிரிக்காவில் 5 லட்சத்து 16 ஆயிரம் பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஜெனீவாவில் உள்ள உலக சுகாதார அமைப்பின் தலைமையகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் உரையாற்றிய அந்த அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம், கொரோனா குறித்த அறிவியல் பூர்வமான பல கேள்விகளுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை என தெரிவித்தார். இதுவரை இல்லாத வேகத்தில் தடுப்பு மருந்தை கண்டுபிடித்தாலும், அந்த மருந்து அனைவருக்கும் சென்றடைய வெகு காலம் பிடிக்கும் என்றும் கூறினார்.

இந்த தொற்று நோய் ஒரு நூற்றாண்டில் ஒருமுறை வரும் சுகாதார நெருக்கடி என்றும், விளைவுகள் பல தசாப்தங்களுக்கு உணரப்படும் என்றும் கூறிய அவர், அதுவரை கொரோனாவோடு வாழ்ந்து கொண்டே, அதனுடன் போராட வேண்டும் என்றும் கூறியுள்ளார். அவரது இந்த கருத்து, உலக நாடுகளுக்கு அதிர்ச்சியையும், அச்சத்தையும் கொடுத்திருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet