Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

சர்க்கரை நோயாளிகள் மாதுளை சாப்பிட்டால் என்ன நடக்கும்… கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்…

0 Comments

Published on: Saturday, August 8th, 2020 at 10:50 PM

சர்க்கரை நோயாளிகள் மாதுளை சாப்பிட்டால் என்ன நடக்கும்… கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்…

மாதுளையில் ஏராளமான சத்துகள் இருந்தாலும், நீரிழிவு அதாவது சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா? ஏதாவது ஆபத்து ஏற்படுமா? என்பது பலருக்கும் குழப்பமாக உள்ளது. அவர்களுக்கு இந்த கட்டுரை தெளிவைத் தரும்.

பொதுவாக சிவப்பு நிறப் பழங்கள் அனைத்துமே எண்ணற்ற பயன்களை தன்னுள் ஒளித்து வைத்திருக்கும். குறிப்பாக, மாதுளையில் எண்ணிலடங்கா நன்மைகள் உள்ளன. மாதுளையில் உடலுக்குத் தேவையான என்சைம்கள் மிக அதிகமாக இருப்பதால், எலும்புகளுக்கு வலு சேர்க்கும். மாதுளை ஜூஸ் எலும்பு தேய்மானத்தில் இருந்து நம்மை பாதுகாக்கிறது.

எலும்பு முறிவு, மூட்டுவலி போன்றவை வராமல் இருக்க, நாள்தோறும் ஒரு கிளாஸ் மாதுளை ஜூஸ் குடிக்கலாம். மாதுளையில் குளுக்கோஸ் அளவு மிக மிகக் குறைவு. அதில் அதிக அளவு பிரக்டோஸ் இருக்கிறது. அதனால், மாதுளை ஜூஸ் ரத்தத்தில் உள்ள சர்க்கரை (குளுக்கோஸ்) அளவை அதிகரிக்கச் செய்யாமல் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.

தொடர்ந்து 2 வாரங்களுக்கு, நாள்தோறும் மாதுளை ஜூஸ் குடித்து வருபவர்களுக்கு சர்க்கரை என்னும் நீரிழிவு நோய் வராமல் இருக்கும். சிலருக்கு நேரத்துக்கு பசி எடுக்காமல் இருப்பதுதான் பெரும்பான்மையான பிரச்சனைகளுக்கு காரணமாக இருக்கிறது.

இந்த பசியின்மை பொதுவாக சிறுவர்களுக்கும், வயதானவர்களுக்கு மிக அதிக அளவில் இருக்கும். அவர்களுக்கு நாள்தோறும் ஒரு கிளாஸ் மாதுளை ஜூஸ் கொடுத்து வந்தால், நேரத்துக்கு பசி எடுக்கும். மாதுளைக்கு பசியைத் தூண்டும் ஆற்றல் உண்டு.

மாதுளையை ஏன் மக்கள் தேடிப் போகிறார்கள் என்றால், அது இயற்கையான அதிகப்படியான ஆற்றலை வழங்குகிறது என்பதால்தான். அத்தகைய மாதுளை நம்முடைய உடலுக்கு ஆற்றலைத் தருவது மட்டுமின்றி, உடலைச் சுத்தம் செய்வதிலும் முன்னிலை வகிக்கிறது. அதனால், தேவையில்லாத நச்சுக்கள் மற்றும் கொழுப்புகள் வெளியேறி, உடல் எடையைக் குறைக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet