0 Comments
Published on: Wednesday, May 27th, 2020 at 9:47 PM
விராட் கோலி வெளியிட்ட ரகசிய வீடியோ – கிண்டலடித்த பிரபல நடிகர்…
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் உடற்பயிற்சியை பாலிவுட் நடிகர் அர்ஜூன் கபூர் கிண்டலடித்த விவகாரம் ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா ஊரடங்கால் வீடுகளில் முடங்கிப் போன விராட் கோலி, தான் செய்யும் உடற்பயிற்சி நுணுக்கங்களை தனது மனைவி அனுஷ்கா சர்மா மூலம் வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார்.
நேற்று ஒரு விதமான உடற்பயிற்சியை செய்து அதற்கு 180 டிகிரி கோணத்தில் நிற்பது போன்ற வீடியோவை விராட் கோலி வெளியிட்டிருந்தார்.
இந்த வீடியோவை பார்த்து விராட் கோலியை கிண்டலடித்துள்ள பாலிவுட் நடிகர் அர்ஜூன் கபூர், பாங்கரா நடனம் போல இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இதனால் கடுப்படைந்த விராட் கோலி ரசிகர்கள், அர்ஜூன் கபூரை கலாய்த்து வருகின்றனர்.
No comments yet