Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கள்ளக்காதலனுடன் நிர்வாணமாக இருந்த மனைவி… நேரில் பார்த்து சண்டை போட்ட கணவனுக்கு நேர்ந்த கதி…

0 Comments

Published on: Saturday, August 8th, 2020 at 11:11 AM

கள்ளக்காதலனுடன் நிர்வாணமாக இருந்த மனைவி… நேரில் பார்த்து சண்டை போட்ட கணவனுக்கு நேர்ந்த கதி…

கள்ளக்காதலனுடன் மனைவி நிர்வாணமாக இருப்பதை பார்த்து சண்டை போட்ட கணவரை, கள்ளக்காதலர்கள் அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே பன்னீர்குட்டையை சேர்ந்தவர் 38 வயதான தச்சுத் தொழிலாளி சரவணன். இவருக்கு காமாட்சி என்ற மனைவியும், மூன்று ஆண் குழந்தைகளும் உள்ளனர். வெள்ளிக்கிழமை காலை பன்னீர்குட்டை பகுதியில் சாலை ஓரம் சரவணன் சடலமாக கிடந்தார். தகவலறிந்த மேல்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

சரவணனின் உறவினர்கள் மற்றும் கிராமத்தினரிடம் விசாரித்தபோது, காமாட்சி மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவரை பிடித்து விசாரித்தபோதுதான், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. காமாட்சிக்கு, அதே பகுதியைச் சேர்ந்த மதன்குமார் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில், கள்ளக்காதலாக மாறியுள்ளது. அதை சரவணன் கண்டித்ததால் இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.

கள்ளக்காதலை மனைவி தொடர்ந்ததால், ஆத்திரத்தில் வீட்டைவிட்டு குழந்தைகளுடன் வெளியேறி அருகில் உள்ள தனது அக்கா வீட்டில் சரவணன் வசித்து வந்தார். மனைவி கள்ளக்காதலை கைவிடாததால் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக குழந்தைகளுடன் அக்கா வீட்டிலேயே வசித்து வந்தார். கணவர் கூடவே இருந்தபோதே கள்ளக்காதலை கைவிடாத காமாட்சி, சரவணன் பிரிந்து சென்றது விட்டதால், இன்னும் வசதியாகி காமக்களியாட்டத்தை ஆடியுள்ளார். கணவர்போல் மதன்குமாருடன் அடிக்கடி வெளியில் செல்வது என தனது பழக்கத்தை காமாட்சி தொடர்ந்து வந்துள்ளார்.

இருவரையும் ஒன்றாக பார்க்கும் இடங்களில் சரவணன் காமாட்சியிடம் சண்டை போட்டும், கள்ளக்காதலை கைவிடுமாறும் வலியுறுத்தி வந்துள்ளார். மேலும், குழந்தைகள் மற்றும் உறவினர்களிடம் காமாட்சியின் கள்ளத்தொடர்பு குறித்து சரவணன் புலம்பி வந்துள்ளார்.

இதனால் இருவரும் சரவணன் மேல் ஆத்திரத்தில் இருந்துள்ளனர். இந்நிலையில், வியாழக்கிழமை இரவு சரவணன் தனது மனைவியை சமாதானப்படுத்துவதற்காக வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு மனைவி காட்சியும், மதன்குமாரும் நிர்வாண நிலையில், சல்லாபத்தில் இருந்துள்ளனர். இதைப் பார்த்து கொதித்துப் போன சரவணன், அவர்களிடம் சண்டை போட்டுள்ளார். ஏற்கெனவே சரவணன் மேல் ஆத்திரத்தில் இருந்த இருவரும் சேர்ந்து அவரை தாக்கியுள்ளனர்.

இதில் உயிரிழந்த சரவணன் உடலை மதன்குமார் எடுத்துச் சென்று சாலையோரம் வீசிவிட்டு சென்றது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. காமாட்சி கொடுத்த தகவலின் பேரில், ஆம்பூரில் பதுங்கியிருந்த மதன்குமாரை குடியாத்தம் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

கணவருக்கு துரோகம் செய்து, கள்ளக்காதலை தொடர்ந்த மனைவி தற்போது கம்பி எண்ணிக் கொண்டிருப்பதால், அவர்கள் பெற்ற குழந்தைகள் இன்று அனாதைகளாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet