Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

நினைவில்லமாகிறது ஜெயலலிதா வீடு – அரசு எடுத்த அதிரடி முடிவு…

0 Comments

Published on: Friday, May 22nd, 2020 at 9:54 PM

நினைவில்லமாகிறது ஜெயலலிதா வீடு – அரசு எடுத்த அதிரடி முடிவு…

சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையத்தை, ஜெயலலிதாவின் நினைவில்லமாக்க தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம், அவரது நினைவில்லமாக்கப்படும் என கடந்த 2017ஆம் ஆண்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதையடுத்து, ஜெயலலிதாவின் இல்லத்தை அரசே கவனித்து வருகிறது.

இந்நிலையில், வேதா நிலையத்தில் இருந்த ஜெயலலிதாவின் பொருட்கள் அனைத்தும் பாதுகாக்கப்பட்டு வருவதாக அறிவித்துள்ள தமிழக அரசு, வேதா நிலையத்தை அரசுடைமையாக்க அவசர சட்டத்தையும் பிறப்பித்துள்ளது. மேலும், வேதா நிலையம், ஜெயலலிதாவின் நினைவில்லமாக்கப்பட்டு பொதுமக்களின் பார்வைக்கு திறக்கப்படும் என்றும், இதை பராமரிக்க ஜெயலலிதா நினைவு அறக்கட்டளை தொடங்கப்படும் என்றும் தமிழக அரசு கூறியுள்ளது.

இந்த அறக்கட்டளையின் தலைவராக முதலமைச்சர் இருப்பார் என்றும், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் என்றும், ஜெயலலிதா நினைவில்ல பராமரிப்புகளை அறக்கட்டளையே மேற்கொள்ளும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet