0 Comments
Published on: Monday, July 20th, 2020 at 11:00 PM
ஏய் நீ யாருடி..? நேரலையில் வனிதா – லட்சுமி ராமகிருஷ்ணன் போட்ட குழாயடி சண்டை…
வனிதா, லட்சுமி ராமகிருஷ்ணன் இருவரும் நேரலையில் சண்டையிட்டிருப்பது திரைவட்டாரத்தில் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
வனிதா-பீட்டர்பால் திருமணத்தைத் தொடர்ந்து, பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, வனிதாவின் திருமணம் குறித்து பலரும் சமூகவலைதளங்களில் பேசி வந்தனர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகையும், இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில் வனிதாவின் திருமணம் குறித்து பதிவிட்டார்.
அதில், பீட்டர் பாலுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருக்கின்றனர். இன்னும் விவாகரத்தாகவில்லை. படிப்பும் அனுபவமும் கொண்டவர்கள் எப்படி இந்த தவறைச் செய்ய முடியும். அதிர்ச்சியடைந்துள்ளேன். வனிதா – பீட்டர் பால் திருமணம் முடியும் வரை ஏன் முதல் மனைவி புகார் அளிக்கவில்லை. திருமணத்தை ஏன் நிறுத்தவில்லை?
வனிதா கடினமான சூழ்நிலைகளை எதிர்கொண்டிருக்கிறார். இந்த உறவாவது அவருக்கு நல்ல விதமாக அமையும் என நினைக்கிறேன். ஆனால் இந்த பிரச்சனையை அவர் கவனிக்கவில்லை என்பது வருத்தமானது. அதிகாரத்துக்கான முழு அர்த்தத்தை பெண்கள் புரிந்து கொள்ளவில்லை என்றால் எதுவும் மாறப்போவதில்லை என்றார்.
லட்சுமி ராமகிருஷ்ணனின் இந்த பதிவுக்கு பதிலளித்துள்ள வனிதா, தம்பதிகளாக இருக்கும் இரண்டு பேர் ஏன் பிரிந்து சென்றார்கள் அல்லது விவாகரத்து செய்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா? நீங்கள் உங்களுக்கு தெரியாத ஒன்றில் எந்த வகையிலும் அக்கறை கொள்வது உங்களுடைய வேலை இல்லை. நான் அவர்களுடைய தனிப்பட்ட விசயத்தில் தலையிடவில்லை. எனவே இந்த விசயத்தில் உங்களுடைய தலையீட்டை நிறுத்திக் கொள்ளுங்கள். உங்களுக்கு தெரியாத ஒருவரை பற்றி எந்தவித கருத்துகளையும் நீங்கள் சொல்ல வேண்டாம் என காட்டமாக பதிலளித்தார்.
இதையடுத்து இருவருக்குமான இணையதளத்தில் நடந்த மோதல் முடிவுக்கு வந்தது. இந்நிலையில், எலிசபெத் ஹெலனை அழைத்து தனியார் இணைய ஊடகம் ஒன்றில் நிகழ்ச்சி நடத்தினார் லட்சுமி ராமகிருஷ்ணன். இதைத் தொடர்ந்து அந்த ஊடகம் ஏற்பாடு செய்திருந்த நேரலையில் வனிதாவும், லட்சுமி ராமகிருஷ்ணனும் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய அனிதா, உங்களைப் பற்றி பேசத்தான் நான் லைவ்வில் வந்தேன். என்ன பிரச்சனை என்று தெரியாமல் நீங்களே மூக்கை நுழைத்துக் கொண்டு யூகிக்க வேண்டாம். உங்களுக்கு என்ன பிரச்சனை. நீங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியா, பின்னர் எதற்கு சட்டம் இருக்கிறது. முடிந்தால் போலீஸ் ஸ்டேஷனில் சொல். என்னிடம் பேச தைரியம் இல்லையா?
www.instagram.com/tv/CC1eFvrjLNo/
கண்ணியம் உள்ள பெண் தானே நீங்கள் என்னிடம் பேசுங்கள். உனக்கு புருஷன் இல்லையா, இரவு 10 மணிக்கு உனக்கு என்ன வேலை. நீ சினிமா இயக்குநராக இருந்தால் படம் இயக்கக்கூடிய வேலையைப் பார். ஒரு கணவர் இருப்பதால் நீ என்ன ஒழுக்கமானவரா? உன்னுடைய விசயங்களை எல்லாம் வெளியில் சொல்லவா? நான் அப்படித்தான் உன்னை பேசுவேன். உனக்கு என்னிடம் பேச அருகதை இல்லை என்றார்.
தொடர்ந்து லட்சுமி ராமகிருஷ்ணன் பேசும்போது, இதைவிட கேவலமாக பேச எனக்கு தெரியும். ஆனால், நான் பேச விரும்பவில்லை. வருடத்திற்கு புருஷனை மாத்துற நீ பேசுகிறாயா என்றார். தொடர்ந்து இருவரும் மிகவும் ஆபாசமாகவும், கேவலமாகவும் குழாயடி சண்டையைப் போல தொடர்ந்து ஒருமையிலேயே பேசிக் கொண்டனர்.
No comments yet