Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

இந்தி படிக்கலன்னாலும் இத படிச்சே ஆகனும்… 3ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு… பி.ஏ., பி.காம்., படிக்கவும் நுழைவுத்தேர்வு… மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை..!

0 Comments

Published on: Wednesday, July 29th, 2020 at 10:55 PM

இந்தி படிக்கலன்னாலும் இத படிச்சே ஆகனும்… 3ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு… பி.ஏ., பி.காம்., படிக்கவும் நுழைவுத்தேர்வு… மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை..!

மும்மொழிக் கொள்கையில் இந்தி படிக்காவிட்டாலும், தாய் மொழி மற்றும் ஆங்கிலத்தைத் தவிர, மூன்றாவதாக ஒரு மொழியை படித்தே ஆகவேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

பெரும் எதிர்ப்புக்கும், விவாதத்திற்கும் இடையே தற்போது தேசிய அளவில் புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதன்மூலம் குறைந்தபட்சம் 5ஆம் வகுப்பு வரை தாய் மொழிக் கல்வியை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்பின்புதான் ஆங்கிலத்திற்கு அனுமதி அளிக்கப்படும். 5ஆம் வகுப்பிற்கு பின் மும்மொழிக் கொள்கையை கொண்டு வர மத்திய அரசு இந்த புதிய கல்விக் கொள்கையில் அனுமதி அளித்துள்ளது.

மும்மொழிக் கொள்கையில் சமஸ்கிருதம் விருப்ப பாடமாக அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்கள் விருப்பத்தின் அடிப்படையில் மொழிகளை தேர்வு செய்யலாம். தங்களுக்கு தேவை இல்லாத பாடங்களை மாணவர்கள் தேர்வு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இந்தி உள்ளிட்ட எந்த மொழியையும் படிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. எந்த மொழியையும் மாணவர்கள் மீது திணிக்கப் போவதில்லை. எந்த மொழிகளை மும்மொழிக் கொள்கைக்கு அனுமதிக்கலாம் என்பதை மாநில அரசுகள் முடிவு செய்யலாம். வெளிநாட்டு மொழிகளையும் மாணவர்கள் தேர்வு செய்து படிக்கலாம். மாணவர்களுக்கு சைகை மொழி அறிமுகப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

மேலும் 6ஆம் வகுப்பு முதலே மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டில் கவனம் செலுத்தப்படும். 3 மற்றும் 5ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும். தற்போது பின்பற்றப்படும் 10+2 என்ற பள்ளி வகுப்பு முறைக்குப் பதிலாக 5+3+3+4 என்ற முறை அறிமுகப்படுத்தப்படும். முதல் 5 ஆண்டுகள் அடிப்படை கல்வியாக இருக்கும். இதில், 3 ஆண்டுகள் தொடக்கக் கல்விக்கு முந்தைய படிப்பு, முதல் மற்றும் இரண்டு வகுப்பு ஆகியவை இடம்பெறும்.

இரண்டாவது கட்டத்தில் 3 முதல் 5 வரையான வகுப்புகளும், நடுநிலையில் 6 முதல் 8 வகுப்புகளும், உயர்நிலைக் கல்வியாக 9 முதல் 12 வரையான வகுப்புகளும் இருக்கும் என்று கல்விக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாரியத் தேர்வுகள் மாணவர்களின் கற்கும் திறனை மட்டும் பார்க்காமல், மாணவர்களின் புலமையை கண்டறியும் வகையில் அமையும்.

3 முதல் 18 வயது வரையான மாணவர்களுக்கு கல்வி உரிமைச் சட்டம் பொருந்தும். இதன்படி, 12ஆம் வகுப்பு வரை இலவச மற்றும் கட்டாயக் கல்வி வழங்கப்படும். பள்ளிக் கல்வியில் பாடச்சுமை குறைக்கப்படும். தற்போது நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய பல்கலைக்கழகங்கள், தனிப்பட்ட பல்கலைக்கழகங்கள் என ஒவ்வொன்றுக்கும் மாறுபட்ட விதிகள் உள்ள நிலையில், தனியார் மற்றும் அரசு உயர்கல்வி நிறுவனங்கள் என அனைத்துக்கும் ஒரே மாதிரியான விதிகள் இருக்கும். இதன்மூலம் எந்த கல்வி நிறுவனமும் வரையறுக்கப்பட்டதை விட கூடுதல் கட்டணத்தை வசூலிக்கக் கூடாது.

சட்டம் மற்றும் மருத்துவக் கல்வியைத் தவிர மற்ற அனைத்து உயர்கல்வி படிப்புகளுக்கும் ஒரே ஒழுங்குமுறை அமைப்பு ஏற்படுத்தப்படும். இளநிலைப் படிப்பு 3 அல்லது 4 ஆண்டு காலத்துக்கு இருக்கும். இதில் சான்றிதழ்களுடன் இடைப்பட்ட காலத்தில் மாணவர்கள் வெளியேறி, சில ஆண்டுகள் ஓய்வுக்குப் பிறகு மீண்டும் படிக்க விரும்பினால், சேர்ந்து கொள்ளலாம். முதுநிலை படிப்பு ஒன்று அல்லது 2 ஆண்டு காலத்துக்கு இருக்கும்.

ஒருங்கிணைந்த இளநிலை, முதுநிலை படிப்புகளும் அறிமுகப்படுத்தப்படும். எம்.பில். பாடத்திட்டம் ரத்து செய்யப்படுகிறது. அனைத்து வகையான கல்லூரிகளில் சேரவும் பொது நுழைவுத்தேர்வு நடத்தப்படும். இந்த தேர்வில் கலந்து கொள்வது கட்டாயமில்லை என்று கல்விக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திற்கு கல்வி அமைச்சகம் என பெயர் மாற்றம் செய்யவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet