Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

இருள் உலக ராஜா அண்டர்டேக்கரின் அதிர்ச்சி முடிவு… கவலையில் மூழ்கிய ரசிகர்கள்…

0 Comments

Published on: Wednesday, June 24th, 2020 at 8:35 PM

இருள் உலக ராஜா அண்டர்டேக்கரின் அதிர்ச்சி முடிவு… கவலையில் மூழ்கிய ரசிகர்கள்…

WWE களத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக கோலோச்சி வந்த தி அண்டர்டேக்கர் ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளதால் லட்சக்கணக்கான ரசிகர்கள் கவலையில் மூழ்கியுள்ளனர்.

தி அண்டர்டேக்கர்… 90ஸ் கிட்ஸ்களை பரவசப்படுத்திய ஆன்டி ஹீரோ. அவரது பெயரை கேட்டாலே மல்யுத்தப் போட்டிகளை ரசிக்கும் அனைத்து தரப்பினரையும் திகில் கலந்த ஆர்வம் தொற்றிக் கொள்ளும். இருளுக்கும் மரியாதை ஏற்படுத்திய அவரது கரிஷ்மா, உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களை கட்டிப்போட்டது.

உயிர் குடிக்க வரும் எமனைப் போல், ரிங்கை நோக்கி அவர் நடந்து வரும் காட்சியும், கருவிழியை மறைக்கும் கோபப் பார்வையும், கழுத்தை கிழிப்பது போன்ற மேனரிசமும் போட்டியாளருக்கும் மட்டுமின்றி ரசிகர்களுக்கும் கலக்கத்தை தரும். அஸ்தி கலசத்தை உதவியாளர் சுமந்து செல்ல, வீழ்ந்தவர்களை சவப்பெட்டியில் “டெட்மேன்” அடைக்கும் காட்சிகளை ரசிகர்கள் எளிதில் மறந்துவிட முடியாது.

இடுகாட்டு சித்தனாக காட்டிக் கொண்டாலும், அவ்வப்போது ரக்கட் லுக் கொண்ட நவீன அமெரிக்கராக, ஸ்போர்ட்ஸ் பைக்கி வலம் வருவதும் அண்டர்டேக்கரின் வாடிக்கை. மார்க் காலவே என்ற இயற்பெயருடைய அண்டர்டேக்கர், 1986 முதல் wcw மல்யுத்த போட்டிகளில் பங்கேற்ற பின் 1990ல் wweல் சேர்ந்ததும் உலகின் கவனத்தை ஈர்த்தார். 90களின் தொடக்கத்தில் சாட்டிலைட் சானல்கள் வருகைக்குப் பின்  இந்திய ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்தார் தி அண்டர்டேக்கர்.

Wwe வெப்சீரிஸின் இறுதிப் போட்டியில், தன் பயணத்தை தொடரப்போவதில்லை என்றும், தான் சாதிக்காதது எதுவும் இல்லை என்ற மனநிறைவு ஏற்பட்டதாகவும் தெரிவித்தார். அந்த நிகழ்ச்சி முடிந்ததும் ட்விட்டரில் “தேங்க்யு டேக்கர் என wwe பதிவிட்டது. அதையடுத்து, ரசிகர்கள் உணர்ச்சிப் பெருக்கில் ட்விட்டரில் தங்கள் கருத்துக்களை உருக்கமாக பகிர்ந்து வருகின்றனர்.

சுமார் 35 ஆண்டுகள் முடிசூடா மன்னனாக விளங்கிய அண்டர்டேக்கர் ரஸல்மேனியா நிகழ்ச்சியில் 30க்கும் மேற்பட்ட போட்டிகளில் தொடர் வெற்றிகளை குவித்தார். பிராக் லெஸ்னர் மற்றும் ரோமன் ரெய்ன்ஸ் ஆகிய இருவர் மட்டுமே கடும் போராட்டத்துக்குப் பின் ஐம்பதை கடந்த அண்டர்டேக்கரை அண்மையில் வீழ்த்த முடிந்தது. போட்டிக்கு பிறகு கதறி அழுததாக, ரெய்ன்ஸ் குறிப்பிட்டது சக போட்டியாளர்களிடம் அவருக்கு இருந்த மரியாதையை உணர்த்தியது.

சில மாதங்களுக்கு முன், ஏ.ஜே.ஸ்டைல்ஸை வீழ்த்திய போட்டியே கடைசி போட்டியாக அண்டர்டேக்கருக்கு அமைந்துவிட்டது. கடைசிப் போட்டியில்  அவரிடம் வீழ்ந்தது மிகப் பெரும் கவுரவம் என ஸ்டைல்ஸ் கூறியுள்ளார். ஒரு நெகட்டிவ் கேரக்டர், மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்க முடியும் என்பதை தனது கதை சொல்லும் நடையிலான உத்தி மூலம் உலகுக்கு உணர்த்தியவர் தி அண்டர்டேக்கர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet