Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

எதற்கெடுத்தாலும் சண்டை – பெற்றோரால் தூக்கில் தொங்கிய இரட்டை சிறுமிகள்…

0 Comments

Published on: Thursday, May 21st, 2020 at 7:28 PM

எதற்கெடுத்தாலும் சண்டை – பெற்றோரால் தூக்கில் தொங்கிய இரட்டை சிறுமிகள்…

வேலூரில் பெற்றோர் அடிக்கடி சண்டை போட்டதால், மனமுடைந்த இரட்டை மகள்கள் தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த மாருதி நகர் பகுதியைச் சேர்ந்த கட்டிட ஒப்பந்ததாரர் பாலசுப்பிரமணியனுக்கு ஒரு மகன் மற்றும் இரட்டை மகள்கள் உள்ளனர். ஆன்லைன் வகுப்பு நடைபெற்று வந்ததால், காலை 10 மணியளவில் பத்மப்பிரியா, ஹரிப்பிரியா ஆகிய இரு மகள்களும் மாடியில் உள்ள அறைக்குச் சென்றுள்ளனர். சிறிது நேரத்தில் வெளியே சென்று திரும்பிய தந்தை பாலசுப்ரமணியன், மகள்கள் எங்கே? என மனைவி கவுரியிடம் கேட்டுள்ளார்.

ஆன்லைன் வகுப்பில் இருப்பதாக தாய் கூறியுள்ளார். நீண்ட நேரமாகியும் வெளியில் வராததால் சந்தேகமடைந்த பெற்றோர், மாலை 4 மணி வாக்கில் மாடிக்குப் போய் பார்த்தபோது, ஒருவர் மின்விசிறியிலும், மற்றொருவர் மின்விசிறியை இணைக்கும் இரும்பு கம்பியிலும் சேலையால் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டது தெரியவந்தது.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் விசாரணையில் தாய்-தந்தை இருவருக்கும் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டதும், அதுவே இரட்டை சகோதரிகளின் இந்த சோக முடிவுக்கு காரணம் என்பதும் தெரியவந்துள்ளது.

11 ஆம் வகுப்பு படித்து வந்த இரட்டையர்கள் திடீரென தற்கொலை செய்து கொண்டது காட்பாடியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிள்ளைகள் வளர்ந்து விட்ட நிலையில், தேவையின்றி பெற்றோர் செய்த தவறு, ஆறாத ரணத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet