0 Comments
Published on: Tuesday, November 12th, 2019 at 9:05 PM
தூத்துக்குடியில் ஒரே நேரத்தில் 10க்கும் மேற்பட்ட ஆண்களுடன் கள்ளக்காதல் தொடர்பில் இருந்த இளம்பெண் ஒருவர் எரித்துக் கொல்லப்பட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்த பெருமாள் என்பவரின் மனைவி கவிதா. பெருமாளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2017 ஆம் ஆண்டு கணவரை பிரிந்த கவிதா, ஆண் நண்பர் ஒருவருடன் தூத்துக்குடி சென்று தனியார் நிறுவனத்தில் அக்கவுண்டண்ட் வேலை பார்த்தார். வேலைபார்த்த இடத்தில் எட்வின் என்ற காவலாளியுடன் கவிதாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. எட்வினும் மனைவியை பிரிந்து வாழ்ந்ததால் கவிதாவுடன் தூத்துக்குடியில் உள்ள குமரன் நகரில் வீடு வாடகை எடுத்து குடும்பம் நடத்தி வந்தார்.
கணவரை பிரிந்து, ஏற்கெனவே ஒரு ஆண் நண்பரையும் பிரிந்த கவிதா, காவலாளி எட்வினுக்கும் உண்மையாக இருக்கவில்லை. எட்வின் இரவு நேர பணிக்குச் சென்ற பிறகு, பல்வேறு நபர்களுடன் கவிதா சுழற்சி முறையில் பழகி வந்துள்ளார். இதை அறிந்த எட்வின் கவிதாவை அடித்து உதைத்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு எட்வின் இரவு வேலைக்குச் சென்ற பிறகு, தன்னுடன் நெருக்கமாக இருந்த ஆட்டோ ஓட்டுநர் கருப்பசாமி என்பவருக்கு போன் செய்த கவிதா, தனது கணவர் தன்னை அடித்து உதைப்பதால், தன்னை காப்பாற்றுமாறு கூறியுள்ளார்.
கவிதா அழுவதைப் பார்த்து மனம் பொறுக்கமுடியாத ஆட்டோ ஓட்டுநர் கருப்பசாமி, விவேகானந்தர் நகரில் வீடு ஒன்றை பார்த்து, கவிதாவை குடிவைத்தார். இதனிடையே கவிதா மாயமாகிவிட்டதால் அவரை பல இடங்களில் தேடி வந்த 2வது கணவர் எட்வின், அலுவலகத்திற்கும் அவர் வராதது கண்டு குழப்பம் அடைந்தார். அவர் பல்லடத்திற்கு திரும்பி சென்றுவிட்டாரோ என எட்வின் குழப்பம் அடைந்த நிலையில், விவேகானந்தர் நகரில் ஆட்டோ ஓட்டுநருடன் கவிதா இருந்துள்ளார். கடந்த 10ஆம் தேதி இரவு ஆட்டோ ஓட்டுநர் கருப்பசாமியும், கவிதாவும் உல்லாசமாக இருந்தபோது, தொடர்ச்சியாக பல்வேறு ஆண் நபர்களிடம் இருந்து கவிதாவுக்கு போன் வந்துள்ளது.
இது குறித்து கருப்பசாமி கேட்டபோது, அண்ணன், தம்பி என பல்வேறு உறவு முறைகளை மாற்றி மாற்றி கூறிய கவிதா, தனிமையில் சென்று ஒரு சிலருடன் மிகவும் கொஞ்சலாக பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கருப்பசாமி, கவிதாவுடன் சண்டையிட்டுள்ளார். வாக்குவாதம் முற்றியதால், விறகு கட்டை ஒன்றை எடுத்து கவிதாவின் தலையில் அடித்த கருப்பசாமி அங்கிருந்து வெளியேறி விட்டதாக கூறப்படுகிறது.
கருப்பசாமியும், கவிதாவும் இரவு நேரத்தில் சண்டையிட்டதை அறிந்த அக்கம்பக்கத்தினர் இது குறித்து காலையில் பேசியுள்ளனர். இந்த தகவல் எட்வினுக்கு கிடைத்ததால், கவிதா குடியிருக்கும் வீட்டிற்கு எட்வின் சென்றுள்ளார். அவரது வீட்டுக் கதவை திறந்தபோது, கவிதா எரிந்த நிலையில் சடலமாக இருந்ததாக சொல்லப்படுகிறது. பின்னர் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் விசாரணையில், கடைசியாக தூத்துக்குடி ஜோதிபாசு நகரை சேர்ந்த 27 வயதான ஆட்டோ ஓட்டுநர் கருப்பசாமி, கவிதாவுடன் குடியிருந்ததை அறிந்தனர். இதனால் போலீசார் கருப்பசாமியை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கவிதா உடன் தனிமையில் இருந்த போது, அவருக்கு பல போன்கள் வந்ததாகவும், அவர்களுடன் அவர் தொடர்ந்து வீடியோ காலில் பேசியதாகவும் கருப்பசாமி தெரிவித்துள்ளார். பின்னர் அதில் ஒருவருடன் வாக்குவாதம் ஏற்பட்டு, திடீரென்று மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றதாகவும், தான் தப்பித்து வெளியில் ஓடிவிட்டதாகவும் போலீசாரிடம் கூறி உள்ளார்.
கருப்பசாமி மாற்றி மாற்றி பேசுவதால் உண்மை என்ன என்பதை கண்டுபிடிக்க முடியாமலும், இது கொலையா? தற்கொலையா? என தெரியாமலும் தூத்துக்குடி போலீசார் குழம்பி வருகின்றனர். இதனால், கவிதா மரணத்தை சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், கவிதா யார் யாருடன் நெருக்கமாக இருந்துள்ளார் என்பதை, அவரது செல்போன் மூலமாக கண்டறியவும், அவர்களை விசாரிக்கவும் முடிவு செய்துள்ளனர்.
இதனால், கவிதாவுடன் கள்ளத் தொடர்பில் இருந்த ஆண்கள் இடியாப்ப சிக்கலில் இருப்பதாக கூறப்படுகிறது.
இதனிடையே, ஒரு சிலரை போலீசார் வரவழைத்து விசாரித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. இன்னும் எத்தனை குடும்பங்களில் பூகங்கம் வெடிக்கப் போகிறதோ தெரியவில்லை…!
No comments yet