Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

ஆபாச படம் பார்த்தவர் கைது… அடுத்தடுத்து சிக்கப் போகும் 3,000 பேர் யார்..?

0 Comments

Published on: Thursday, December 12th, 2019 at 10:49 PM

குழந்தைகள் ஆபாச படங்களைப் பார்த்ததோடு, அவற்றை சமூகவலைதளங்கள் மூலம் பகிர்ந்த திருச்சியை சேர்ந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். இதேபோன்று 3,000 பேரின் பட்டியலை வைத்துள்ளதாக கூறும் போலீசார், அடுத்தடுத்து அவர்களை கைது செய்யப் போவதாக கூறியுள்ளனர்.

திருச்சி காஜாபேட்டையைச் சேர்ந்தவர் கிறிஸ்டோபர் அல்போன்ஸ்ராஜ். திருமணமான இவருக்கு குழந்தைகள் இல்லாத நிலையில், நாகர்கோவிலில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் வேலைபார்த்து வந்தார். 18 வயதுக்கு குறைவானவர்கள் செக்ஸ் வைத்துக் கொள்ளும் வீடியோக்களை பார்ப்பதில் மிகவும் ஆர்வமான இவர், பேஸ்புக்கில் ஆதவன் ஆதவன் என்ற பெயரில் கணக்கு தொடங்கி, அதில் தான் பார்த்த ஆபாச படங்களை பகிர்ந்து வந்துள்ளார்.

ஆபாச படங்கள் பகிரப்பட்டதால், அந்த கணக்கை பேஸ்புக் நிறுவனம் முடக்கிவிட்ட நிலையில், நிலவன் நிலவன் என்ற பெயரில் மற்றொரு முகநூல் கணக்கைத் தொடங்கிய கிறிஸ்டோபர், அதில் குழந்தைகள் ஆபாச படங்களை நேரடியாக பதிவிடுவதை தவிர்த்து, மெசஞ்சர் மூலம் பகிர்ந்து வந்துள்ளார்.

இவர் பதிவிடும் ஆபாச படங்களுக்கு பலர் அடிமையாக இருந்ததை அறிந்த கிறிஸ்டோபர், மெசஞ்சரில் ஒரு குழுவைத் தொடங்கினார். அதில் 100க்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக சேர்ந்ததால், தான் பார்க்கும் ஆபாச படங்களை, அந்த குழுவில் மறக்காமல் பதிவிடுவார். அவற்றை பார்க்கும் மற்றவர்கள், கிறிஸ்டோபரை சிலாகித்து பாராட்டியதால், மேலும் குளிர்ந்து போன அவர், பல இடங்களில் இருந்து குழந்தைகள் ஆபாச படங்களை வாங்கி அதையும் குழுவிலேயே பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு உலகம் முழுவதும் ஆபாச படங்களை பார்ப்போர் குறித்து ஆய்வு செய்த அமெரிக்காவின் எஃப்.பி.ஐ. அமைப்பு, இந்தியர்கள் தான், அதிகளவில் ஆபாச படங்களைப் பார்ப்பதாகவும், அதிலும் தமிழகம் முதலிடம் என்றும் கூறியது. இதையடுத்து, பல ஆபாச இணையதளங்களை முடக்கிய மத்திய அரசு, வாட்ஸ் ஆப், பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதளங்கள் மூலம் ஆபாச படங்களை பார்ப்போர் மற்றும் பகிர்வோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு, தமிழக அரசுக்கு அறிக்கை அளித்தது.

இதையடுத்து, களத்தில் இறங்கிய மாநில போலீசார், குழந்தைகள் ஆபாச படங்களை பார்ப்போரை முதலில் குறிவைத்தனர். அதிகளவில் குழந்தைகள் ஆபாச படங்களை பார்ப்போரின் பட்டியல்களை, அவர்களது மொபைல் எண் மற்றும் கம்ப்யூட்டர் ஐ.பி. அட்ரஸ் மூலம் தயாரித்த போலீசார், ஒவ்வொருவராக கைது செய்ய முடிவு செய்தனர்.

இதனிடையே, நாகர்கோவிலில் பார்த்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு, சொந்த ஊரான திருச்சிக்கு வந்த கிறிஸ்டோபர், முழு நேரமும் குழந்தைகள் ஆபாச படங்களை பார்ப்பதும், அவற்றை மெசஞ்சர் குழுவில் பகிர்வதுமாக இருந்துள்ளார். அவரை தொடர்ந்து கண்காணித்த போலீசார், வியாழக்கிழமை காலையில் அவரது வீட்டுக்குச் சென்று கையும் ஆபாச வீடியோவுமாக கைது செய்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த போலீசார், அவரது குழுவில் இருக்கும் மற்ற நபர்களையும் கைது செய்ய முடிவு செய்துள்ளனர்.

அதில் ஒரு சிலரே மிகவும் ஆக்டிவாக இருப்பதால் அவர்களை கட்டம் கட்டி தூக்க முடிவு செய்துள்ள போலீசார், தாங்கள் தயாரித்து வைத்துள்ள 3000 பேர் பட்டியலில், வாட்ஸ் ஆப், ட்விட்டர், பேஸ்புக் ஆகியவற்றில் ஆபாச படங்களை பதிவிட்டவர்களின் பெயர்களும் இருப்பதாக கூறியுள்ளனர்.

அடுத்தது யாரோ..?!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet