0 Comments
Published on: Saturday, August 1st, 2020 at 9:48 AM
நாளை தளர்வற்ற முழு ஊரடங்கு… எவையெல்லாம் கிடைக்கும்… கிடைக்காது?
தமிழகம் முழுவதும் மேலும் ஒரு மாதத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருப்பதோடு, ஞாயிற்றுக்கிழமையான நாளை தளர்வற்ற முழு ஊரடங்கு அமலாகிறது. எனவே தேவையானப் பொருட்களை இன்றே வாங்கிக் கொள்ளுங்கள்.
சென்னையில் கொரோனா தொற்று குறைந்துவரும் நிலையில், பிற மாவட்டங்களில் தொற்றின் வேகம் அதிகரித்து வருகிறது. இதனால், ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருப்பதோடு, இந்த மாதத்தில் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகளின்றி முழு ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஒரு மாதத்திற்கு முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருந்தாலும் டீக்கடை, உணவகங்களில் 50% பேர் வரை அமர்ந்து சாப்பிடலாம். 75% தொழிலாளர்களுடன் பணியாற்றலாம், கடைகள் கூடுதலாக ஒரு மணி நேரம் இயங்கலாம் என்பது உள்ளிட்ட மேலும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
வழக்கமான ஞாயிற்றுக்கிழமை தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கின்படி, மாநிலம் முழுவதும் இன்று நள்ளிரவு முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வர உள்ளது. அத்தியாவசிய தேவைகளான பால் கடை, மருந்தகங்கள் மட்டுமே இயங்கும். காய்கறி, மளிகைக் கடை, உணவகங்கள் உள்பட அனைத்துக் கடைகளும் மூடப்பட்டிருக்கும்.
இதேபோல், மாநிலம் முழுவதும் டாஸ்மாக் கடைகளும் அடைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய, மருத்துவ வாகனங்களுக்காக மட்டும் சொற்ப அளவிலான பெட்ரோல் பங்குகள் இயங்கும். கொரோனா பரவலை தடுக்கும் விதமாக மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
No comments yet