Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை – மெட்ரிக் பள்ளிகள் நிலை என்ன?

0 Comments

Published on: Friday, January 3rd, 2020 at 11:09 PM

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் ஜனவரி 6ஆம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

அரையாண்டுத் தேர்வு விடுமுறைக்குப் பின் இன்று பள்ளிகள் திறக்கப்படுவதாக முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ஆசிரியர்கள் ஈடுபடுவதால், பள்ளிகள் திறப்பு நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதே நேரத்தில், வாக்கு எண்ணிக்கை நேற்று முதல் 24 மணி நேரத்தைக் கடந்தும் தொடர்ச்சியாக நடைபெற்றதால் நாளை திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படுமா? என சந்தேகம் எழுந்தது.

பல்வேறு பள்ளிகளில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதனால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் அரையாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து ஜனவரி 6ஆம் தேதி திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் கூறியுள்ளார்.

ஆனால், தனியார் பள்ளிகள் நாளை திறக்கப்படுமா என்பது குறித்து தெளிவான விளக்கம் இல்லை. தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு விடுமுறை குறித்து எதுவும் கூறாமல் இருக்கிறது. அதேவேளையில் சில தனியார் பள்ளிகளில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாமும் நடைபெறுவது வழக்கம். எனவே, தனியார் பள்ளிகள் திறக்கப்படுமா ? அல்லது அரசுப் பள்ளிகளைப் போல விடுமுறை அறிவிக்கப்படுமா? என்ற தற்போது வரை குழப்பம் நீடிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet