Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

இன்றைய ராசிபலன் – 08-01-2020

0 Comments

Published on: Wednesday, January 8th, 2020 at 9:18 AM

மேஷம்: குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். அழகும் இளமையும் கூடும். தள்ளிப்போன விஷயங்கள் உடனே முடியும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். புதிய பாதை தெரியும் நாள்.

ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சில காரியங்களை போராடி முடிப்பீர்கள். வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போங்கள். முன்கோபத்தால் பகைகள் உண்டாகும். லேசாக தலை வலிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் தவறை சுட்டிக் காட்டினால் மாற்றிக்கொள்வது நல்லது. நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.

மிதுனம்: எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். வாகனத்தில் கவனம் தேவை. முக் கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் வெளியாட்களிடம் விவாதம் வேண்டாம். உத்தியோகத்தில் மேல் அதிகாரிகளுடன் மோதல் போக்கை தவிர்க்கவும். போராடி வெல்லும் நாள்.

கடகம்: ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். பொதுப்பொருள் வந்துசேரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்து கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள்.

சிம்மம்: சொன்ன சொல்லை காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். சொந்தபந்தங்கள் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் சூட்சுமங்களை கற்றுக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

கன்னி: இதுவரை கணவன்-  மனைவிக்கு இருந்து வந்த பிணக்குகள் நீங்கும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவுக் கிட்டும். உத்தியோகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.

துலாம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் நிறை குறைகளை எடுத்துச் சொன்னால் கோபப்படாதீர்கள். உடல் நலம் பாதிப்பு ஏற்படும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஆகும். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.

விருச்சிகம்:  உங்களுடைய அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். உடன் பிறந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு பக்கபலமாக இருப்பார்கள். கல்யாணபேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வாகனத்தை சரிசெய்வீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகள் தேடிவரும். திறமைகள் வெளிப்படும் நாள்.

தனுசு: வர வேண்டிய பணம் கைக்கு வரும். உறவினர்கள் நண்பர்கள் மக்கள் மத்தியில் முக்கியத்துவம் அதிகரிக்கும். அதிகாரப்பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபரத்தில் வேலையாட்களை தட்டிக்கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். தொட்டகாரியம் துலங்கும் நாள்.

மகரம்: குடும்பத்தார் ஆதரவு பெருகும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் ஆதரவு கிடைக்கும். புதுமை படைக்கும் நாள்.

கும்பம்: பழைய பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். தாயாரு டன் வீண் விவாதம் வந்து போகும். பணப்பற்றாக்குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களில் பிரச்சினை தீரும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முரிய டிப்பீர்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

மீனம்: தைரியமாகவும் துணிச்சலாக சில முக்கிய முடிவுகளை எடுத்து செயல்படுத்தவீர்கள் சகோதர சகோதரிகளால் ஆதாயம் உண்டு. விருந்தினர்களின் வருகையால் வீடுகளை கட்டும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். புதிய சரக்குகளை கொள்முதல் செய்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். வெற்றி கிட்டும் நாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet