Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

தமிழகத்தில் ஆகஸ்ட் 31 வரை முழு ஊரடங்கு… ஞாயிற்றுக்கிழமைகளில் கடைகள் இருக்காது… வேறு என்ன?

0 Comments

Published on: Thursday, July 30th, 2020 at 5:38 PM

தமிழகத்தில் ஆகஸ்ட் 31 வரை முழு ஊரடங்கு… ஞாயிற்றுக்கிழமைகளில் கடைகள் இருக்காது… வேறு என்ன?

தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளுடன் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதத்திலும் ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகளற்ற ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் மருத்துவக் குழுவுடன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில், கட்டுப்பாடுகளுடன் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, தற்போது 50% பணியாளர்களுடன் இயங்கும் நிறுவனங்கள் ஆகஸ்ட் மாதத்தில் 75% பணியாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உணவகங்கள், தேநீர் கடைகளில் 50% இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து காலை 6 முதல் இரவு 7 மணி வரை உணவு அருந்தலாம். குளிர்சாதன வசதி இருந்தால், அவை இயக்கப்படக் கூடாது.

இதேபோல், இனி காய்கறி, மளிகை கடைகள் காலை 6 முதல் இரவு 7 மணி வரை இனி இயங்கும். மற்ற கடைகள் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை இயங்கலாம். 10 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக ஆண்டு வருமானம் உள்ள கோயில்களில் பொதுமக்கள் தரிசனத்திற்கான அனுமதி தொடருகிறது. அத்தியாவசிய மற்றும் அத்தியாவசியமற்ற பொருட்களை மின் வணிக நிறுவனங்கள் மூலம் வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

10 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமான வருமானம் உள்ள பெரிய வழிபாட்டு தலங்கள் மற்றும் மாநகராட்சி பகுதிகளில் உள்ள வழிபாட்டு தலங்களுக்கு அனுமதி இல்லை. 5 நபருக்கு மேல் ஒன்றுகூடக் கூடாது என்ற நடைமுறை தொடர்ந்து அமலில் இருக்கும். ரயில் மற்றும் விமான போக்குவரத்தை பொறுத்தவரை தற்போதுள்ள நிலையே தொடரும். அதாவது, மெட்ரோ ரயில், மின்சார ரயில் சேவைக்கான தடை தொடர்கிறது. இதேபோல், சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடையும் நீடிக்கிறது.

மாநிலங்களுக்குள்ளும் மாநிலங்களுக்கு இடையேயும் தனியார் மற்றும் பொது போக்குவரத்திற்கு அனுமதி கிடையாது. மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் போதும், வெளி மாநிலம் செல்லும் போதும் இ-பாஸ் பெற வேண்டியது கட்டாயமாகும். சுற்றுலா தலங்களுக்கு வெளியூர் பயணிகள் செல்ல அனுமதி கிடையாது. வணிக வளாகங்கள், ரிசார்டுகள், தங்கும் வசதியுடன் கூடிய ஹோட்டல்களை திறக்க அனுமதி இல்லை. மால்கள், திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், நீச்சல் குளங்கள், கேளிக்கை விடுதிகள், மது கூடங்களை போன்றவற்றை திறக்கவும் அனுமதியில்லை. பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் திறக்கப்படாது.

அதேசமயம், பள்ளி, கல்லூரிகளில் இணைய வழி கற்றல் தொடருவதுடன் அதனை ஊக்குவிக்கவும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. தனிமனித இடைவெளி, முகக்கவசம் அணிவது உள்ளிட்ட மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி ஆகஸ்ட் 15ல் சுதந்திர தின விழா கொண்டாடப்படும். ஜூலை மாதம் போலவே ஆகஸ்டிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகளற்ற ஊரடங்கு அமலில் இருக்கும். இந்த அனைத்து கட்டுப்பாடுகளுடன் ஆகஸ்ட் 31 நள்ளிரவு 12 மணி வரை நீடிக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet