Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு அனுமதியில்லை… நக்சல் அதிகாரிகளே காரணம் என குற்றச்சாட்டு..!

0 Comments

Published on: Thursday, August 13th, 2020 at 9:50 PM

விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு அனுமதியில்லை… நக்சல் அதிகாரிகளே காரணம் என குற்றச்சாட்டு..!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் சிலை வைக்கவும், அதை ஊர்வலமாக எடுத்துச் செல்லவும் அனுமதி இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது.

விநாயகர் சதுர்த்தி பண்டிகை வரும் 22ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், பொது விழாக்களை தவிர்க்குமாறு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் பொது இடங்களில் மக்கள் அதிகமாக கூடுவதைத் தவிர்க்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது.

கொரோனா பரவலைத் தடுக்கவும், பொதுமக்கள் நலன் கருதியும் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்கவோ, சிலை வைத்து விழா கொண்டாடவோ அனுமதி இல்லை என கூறியிருப்பதோடு, விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்லவும், நீர்நிலைகளில் கரைக்கவும் அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது.

எனவே வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தி பண்டிகையை கொண்டாடுமாறு அறிவுறுத்தியுள்ள தமிழக அரசு, பண்டிகைக்கு தேவையான பொருட்களை வாங்க கடைகளுக்கோ, சந்தைக்கோ செல்பவர்கள் முகக்கவசம் அணிந்து, தனிமனித இடைவெளியை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. சிறிய கோயில்களில் வழிபாடு நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள தமிழக அரசு, அங்கும் வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், தடையை மீறி பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைப்போம் என இந்து முன்னணி அறிவித்துள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, நக்சல் சிந்தனையுள்ள அதிகாரிகள் சிலர், தவறான ஆலோசனைகளை வழங்கியுள்ளதாகவும், அதன் காரணமாகவே விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும், இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் என்பவர் குற்றஞ்சாட்டியுள்ளார். எனவே, தமிழக அரசின் தடையை மீறி சிலைகளை வைப்போம் என்றும், திட்டமிட்டபடி விநாயகர் சிலை ஊர்வலத்தை நடத்துவோம் என்றும் கூறியிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet