Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

ஆட்டோக்கள் வழக்கம்போல் இயங்கலாம்…. ஆனா இங்க மட்டும் அனுமதி இல்லை…

0 Comments

Published on: Friday, May 22nd, 2020 at 7:55 PM

ஆட்டோக்கள் வழக்கம்போல் இயங்கலாம்…. ஆனா இங்க மட்டும் அனுமதி இல்லை…

சென்னை தவிர தமிழகத்தில் பிற மாவட்டங்களில் ஆட்டோக்கள், சைக்கிள் ரிக்‌சாக்களை இயக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.

கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து தவித்த ஆட்டோ உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள், தற்போது பல தொழில்களுக்கு வழங்கப்பட்டுள்ள தளர்வைத் தொடர்ந்து ஆட்டோக்களை இயக்க அனுமதிக்க அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மாநகர காவல் எல்லையைத் தவிர, தமிழகம் முழுவதும் ஆட்டோ, சைக்கிள் ரிக்சாக்களை ஓட்டுனர் மற்றும் ஒரு பயணி மட்டும் பயணிக்கும் வகையில் இயக்க அனுமதியளிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நாள்தோறும் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே இயக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஆட்டோ, சைக்கிள் ரிக்‌சா ஆகியவற்றை இயக்க அனுமதி கிடையாது என்றும், அப்பகுதியில் வசிப்பவர்களும் இவ்வாகனங்களை ஓட்டக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பயணிகள் பயன்படுத்தும் வகையில் வாகனங்களில் கிருமி நாசினிகளை வைத்திருக்க வேண்டும், ஓட்டுனர்களும், பயணிகளும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும், ஆட்டோ, சைக்கிள் ரிக்சா ஆகியவற்றை தினமும் மூன்று முறை கிருமி நாசினியால் சுத்தப்படுத்த வேண்டும், ஓட்டுனர்கள் அடிக்கடி சோப்பு கொண்டு கை கழுவ வேண்டும் என்ற கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet