Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

எங்களுக்கு வந்தா தக்காளி சட்னி… உங்களுக்கு வந்தா ரத்தமா..?! திரௌபதிக்கு பெருகும் ஆதரவு…!

0 Comments

Published on: Sunday, January 5th, 2020 at 1:13 PM

அடிச்சா திருப்பி அடி… சாதிகள் உள்ளதடி பாப்பா… போன்ற போஸ்டர் வசனங்களால் தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்த திரௌபதி படத்தின் டிரெய்லர், இன்று சமூக வலைதளங்களில் பெரும் ஆதரவை பெற்றுள்ளது.

அட்டக்கத்தி படத்தில் தொடங்கி மெட்ராஸ், கபாலி, காலா என பெரிய நடிகர்களை வைத்து உருவாக்கிய படத்தில் கூட, தனது சாதியை முன்னிலைப்படுத்தியே படமெடுத்தார் பா.ரஞ்சித். அதன்பிறகு நீலம் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கிய அவர், பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு ஆகிய  படங்களையும் தனக்கு கீழ் உதவியாளர்களாக பணியாற்றியவர்களை வைத்து இயக்கப்பட்ட சாதியப் படங்களையே வெளியிட்டார் பா.ரஞ்சித்.

பா.ரஞ்சித் இயக்கிய, தயாரித்த படங்களை பார்த்த தலித்களை தாண்டிய பலரும் பாராட்டவே செய்தாலும், முத்தையா எடுத்த தேவராட்டம் படத்திற்கு தலித்கள் தரப்பில் பலரும் பொங்கி எழுந்தனர். அப்போதுதான் பரியேறும் பெருமாள் படத்தை ரசித்து பாராட்டிய பொதுவெளியினர், பா.ரஞ்சித் இயக்கினால் சமூகப் படம்… முத்தையா எடுத்தால் சாதியப் படமா என கேள்வி எழுப்பினர். அதே கேள்வி தற்போது திரௌபதி படத்தின் டிரெய்லர் மூலம் வெளிப்பட்டிருக்கிறது.

ஆண்ட சாதி பெண்களை காதலிக்கச் சொல்லியிருக்கிறார் எங்கள் அண்ணன், அடங்க மறு என கூறியுள்ளார் எங்கள் அண்ணன் என்ற வசனங்களோடு வெளிவந்துள்ள திரௌபதி படத்தின் டிரெய்லரில், எங்களுக்கு மண்ணு பொண்ணு முக்கியம்… மீறி கைய வச்ச, கைய வெட்டுவோம், நாடகக் காதல் என கூர்தீட்டப்பட்ட வசனங்களும் தெறிக்கிறது.

பா.ரஞ்சித்தின் படங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே இந்த படம் வெளியாக இருக்கிறது என்பதை, டிரெய்லர் மூலம் உணர முடிகிறது. வட மாவட்டங்களில் வசிக்கும் ஒரு குறிப்பிட்ட சமூக பெண்களை குறிவைத்து பா.ரஞ்சித் படங்களை இயக்கி வருவதாக குற்றஞ்சாட்டியுள்ள பழைய வண்ணாரப்பேட்டை இயக்குநர் மோகன், இதை நிறுத்தியே ஆக வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும், படத்தை திரையரங்குக்கு போய் பார்க்காவிட்டாலும், டவுன்லோடு செய்தாவது பாருங்கள், பார்க்கத்தான் படம் எடுத்துள்ளோம், பணம் சம்பாதிக்க அல்ல… என்று இயக்குநர் மோகன் கூறியிருக்கும் கருத்தும், திரௌபதியின் டிரெய்லரும் சமூக வலைதளங்களில் தற்போது டிரெண்டிங் ஆகியுள்ளது.

ஆண்ட சாதி, ஆண்ட சாதினு ஆயிரம் முறை சொல்லி, அதில் இருக்கும் தப்பை மட்டும் வெளிச்சம்போட்டு, எல்லோரையும் நோகடித்து, குற்ற உணர்ச்சி அடைய வைத்தால் அது புரட்சி படம், சமூகத்தில் இருக்கும் நாடகக் காதல் விசயத்தை சொன்னால் அது பாடம். அவ்ளோதான் சார் போராளீஸ் என்றெல்லாம் ஒரு தரப்பினர் கருத்தை தெறிக்கவிட்டு, தங்களது ஆதங்களை கொட்டி வருகின்றனர்.

எல்லா சாதியிலும், எல்லா இனத்திலும் சரி, தவறு இருக்கும்போது, ஆண்ட சாதின்னு சொல்லி அதில் இருக்கும் தவறுகளை மட்டுமே எதிர் தரப்பினர் சொல்லும்போது, சரியானவற்றை சொல்வதில் தவறிலை என்றும் திரௌபதிக்கு ஆதரவு பெருகியுள்ளது.

இதனால், படம் இப்போதே ஹிட் என ஒரு குழுவினர் கூறி வருகின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம்… திரௌபதியை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet