Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கனவில் வந்து அழைத்த மாமியார்… குழந்தையை கொன்று தற்கொலைக்கு முயன்ற கர்ப்பிணி…

0 Comments

Published on: Monday, August 3rd, 2020 at 7:40 PM

கனவில் வந்து அழைத்த மாமியார்… குழந்தையை கொன்று தற்கொலைக்கு முயன்ற கர்ப்பிணி…

தற்கொலை செய்து கடந்த ஆண்டு உயிரிழந்த மாமியார் கனவில் வந்து அழைத்ததால், பெற்ற பிள்ளையை கொலை செய்துவிட்டு, இளம்பெண் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை அடுத்த கீழ்சிறுபாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி கலையரசன் மனைவி சுகன்யா. இந்த தம்பதியின் 6 வயது மகள் நிவேதா ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார். மேலும் சுகன்யா தற்போது 4 மாத கர்ப்பிணியாக உள்ளார்ஞாயிற்றுக்கிழமை கலையரசன் வயலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியபோது வீட்டில் மனைவியும், மகளும் இல்லை. வீட்டின் பின்பக்கம் சென்று பார்த்தபோது குளியலறையில் மனைவியும் மகளும் கழுத்தறுபட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்து அலறினார்.

அருகில் சென்று பார்த்தபோது மகள் நிவேதா உயிரிழந்த நிலையிலும், மனைவி சுகன்யா உயிருக்கு போராடியும் வந்தார். கலையரசனின் அலறல் சத்தம் கேட்டு ஓடிச் சென்ற அக்கம் பக்கத்தினர் சுகன்யாவை மீட்டு சிகிச்சைக்காக, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தகவலறிந்து சென்ற தண்டராம்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து, உயிரிழந்த சிறுமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், நடத்தப்பட்ட விசாரணையில், சுகன்யா தனது மகளை அரிவாள்மனையால் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு, தானும் தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்துள்ளது.

இது குறித்து அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்களிடம் நடத்திய விசாரணையில், கணவன் மனைவிக்குள் எந்த தகராறும் இல்லை என்பது உறுதியானது. இதனால் குழப்பமடைந்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தியபோது, ஓராண்டிற்கு முன்பு சுகன்யாவின் மாமியார் கலையரசன் வீட்டிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

தற்கொலை செய்து கண்ட மாமியார் அடிக்கடி தனது கனவில் வந்து தன்னையும், தனது மகளையும் கூப்பிடுவதாக  அக்கம் பக்கத்தினரிடம் சுகன்யா கூறி வந்துள்ளார். இதனாலேயே சுகன்யா தனது மகளை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, தற்கொலைக்கு முயன்றாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet