Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

ஆட்டம் காட்டும் அருள் அண்ணாச்சி – மிரண்டு போன படக்குழு..?!

0 Comments

Published on: Saturday, December 21st, 2019 at 9:55 AM

ஜேடி – ஜெர்ரி இயக்கத்தில் சரவணா ஸ்டோர் அருள் நடித்து வரும் படத்திற்கு பிரமாண்ட செட் போட்டு, படப்பிடிப்பு தொடங்கியுள்ள நிலையில், அவரது நடன அசைவுகளைப் பார்த்து படக்குழு மிரண்டு போயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சொந்த கடைக்கு தானே களமிறங்கி பிரபல நடிகைகளுடன் ஆட்டம் பாட்டத்துடன் விளம்பரம் செய்த சரவணா ஸ்டோர் அருள், தமிழக மக்களிடையே மிகவும் பிரபலம். இவருக்கு எதுக்கு இந்த வேலை என ஆரம்பத்தில் முகம் சுழித்த பலர், இன்று அவரையும் ஒரு நடிகராக ஏற்றுக் கொண்டுவிட்டனர். தனுஷ் ஒரு படத்தில் சொல்வதுபோல, பார்த்தவுடனே பிடிக்காத பலருக்கு, பார்க்க… பார்க்க பிடித்துவிட்டது. இதையே மூலதனமாக வைத்து, திரைப்படத்திலும் நடிக்கத் தொடங்கிவிட்டார்.

ரூ.30 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தை ஜேடி – ஜெர்ரி இயக்கி வரும் நிலையில், இயக்குநர் ஷங்கருக்கே சவால் விடுக்கும் வகையில் போடப்பட்டிருக்கும் பிரமாண்ட செட் குறித்த செய்தி வெளியாகியுள்ளது. இந்த செட்டில் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், முதல் காட்சியே கதாநாயகியுடன் அருள் ரொமாண்டிக் பாடலில் நடிப்பதுதானாம்.

இந்த புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவிவரும் நிலையில், அருள் அண்ணாச்சியின் டான்ஸ் மூமண்டை பார்த்து, நடன இயக்குநரே வாயடைத்துப் போய்விட்டதாக கூறுகிறது ஒரு குரூப். எது எப்படி இருந்தாலும், படம் வெளிவரும் போது தெரிந்துவிடும்…

தமிழக மக்கள் வெய்ட்டிங்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet