0 Comments
Published on: Monday, July 6th, 2020 at 12:17 PM
150 பேரை அழைத்து பிறந்தநாள் கொண்டாடிய வைர வியாபாரி கொரோனாவுக்கு பலி…
தெலங்கானா மாநிலத்தில் 150 பேரை அழைத்து பிரமாண்டமாக பிறந்தநாள் கொண்டாடிய வைர வியாபாரி கொரோனா பாதித்து உயிரிழந்துவிட்டதால், விழாவில் பங்கேற்றவர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் வைர வியாபாரி ஒருவர், கடந்த இரு வாரங்களுக்கு முன்பு பிரமாண்டமாக தனது பிறந்த்நாளை கொண்டாடினார். அந்த விழாவில் அவருடைய அழைப்பு ஏற்று 150க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். அந்த பிறந்தநாள் நிகழ்ச்சியில் ஏராளமான வைர வியாபாரிகளும், தங்க வியாபாரிகளும், அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
பிறந்தநாள் விழா முடிந்து, மூன்று நாட்கள் கழித்து அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. பின்னர் அவர் ஐதரபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி கடந்த 2 நாட்களுக்கு முன்னர் உயிரிழந்தார். இதேபோல், அவரது பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற மற்றொரு நகை வியாபாரியும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உயிரிழந்தார்.
இதனிடையே, வைர வியாபாரியின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற அரசியல்வாதி உள்ளிட்ட 12 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், விழாவில் பங்கேற்ற மேலும் பலர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இதையடுத்து, அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
No comments yet