Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

செல்போனில் செய்தி பார்த்தால் பணமா? – தமிழகத்தில் ரூ.100 கோடி சுருட்டிய நிறுவனம்…

2 Comments

Published on: Wednesday, August 5th, 2020 at 10:13 PM

செல்போனில் செய்தி பார்த்தால் பணமா? – தமிழகத்தில் ரூ.100 கோடி சுருட்டிய நிறுவனம்…

செல்போன் ஆப்-பில் செய்தி பார்த்தால், பணம் தருவதாக கூறி, ரூ.100 கோடி மோசடி நடைபெற்றுள்ளதாக, ஈரோடு போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தெலங்கானாவைச் சேர்ந்த அபெக்ஸ் என்ற நிறுவனம், செல்போன் ஆப்-பில் செய்தி பார்த்தால், பணம் தருவதாக கூறி விளம்பரம் செய்துள்ளது. ஆனால், இதில் இணைய ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

இதனை நம்பி தமிழகம் முழுவதும் சுமார் ஒன்றரை லட்சம் பேர், முதலீடு செய்துள்ளனர். இந்த வகையில் சுமார் ரூ.100 கோடி முதலீடு நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த மார்ச் முதல் அந்த செய்தி ஆப் செயலிழந்துள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் அபெக்ஸ் நிறுவனத்தை தொடர்பு கொண்டபோது, அவர்கள் உரிய பதில் அளிக்கவில்லை.

ஈரோடு மாவட்டத்தில் மட்டும் ரூ.5 கோடி வரை வசூலிக்கப்பட்டதாகவும், அனைவரையும் அபெக்ஸ் நிறுவனம் ஏமாற்றி விட்டதாகவும் குற்றம்சாட்டி, பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2COMMENTS