0 Comments
Published on: Monday, September 7th, 2020 at 10:12 PM
அந்த பேச்சுக்கே இடமில்லை… மத்திய அரசிடம் கறாராக கூறிய தமிழக அரசு..!
தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடரும் என தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
புதிய கல்விக் கொள்கையை வகுத்துள்ள மத்திய அரசு, நாடு முழுவதும் மும்மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. மேலும், இளைஞர்களின் எதிர்கால நலன் கருதியே புதிய கல்விக் கொள்கை வகுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி விளக்கம் அளித்தார்.
இந்நிலையில், தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே கடைப்பிடிக்கப்படும் என தமிழக அரசு ஏற்கெனவே தெரிவித்திருந்தது. இந்நிலையில், மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியலுக்கு, தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கடிதம் எழுதியுள்ளார். அதில், எதிர்காலத்திலும் இருமொழி கொள்கையை தமிழக அரசு கடைப்பிடிக்கும் என்றும், நுழைவுத்தேர்வு கிராமப்புற மாணவர்களுக்கு சுமையை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார்.
இருமொழி கொள்கை தமிழகத்தில் வெற்றிகரமாக செயல்படுத்தப்படுவதால், அதை தொடர முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
No comments yet