Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

மரணத்திற்கு முன்பு கூகுளில் சுஷாந்த் சிங் தேடிய வார்த்தை… அதிர்ச்சி தகவலை வெளியிட்ட போலீஸ்…

0 Comments

Published on: Tuesday, August 4th, 2020 at 9:53 AM

மரணத்திற்கு முன்பு கூகுளில் சுஷாந்த் சிங் தேடிய வார்த்தை… அதிர்ச்சி தகவலை வெளியிட்ட போலீஸ்…

இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு கூகுளில் தேடிய வார்த்தைகள் குறித்த அதிர்ச்சி தகவலை போலீஸ் வெளியிட்டிருக்கிறது.

இளம் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் 14ஆம் தேதி மும்பையில் உள்ள வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். சுஷாந்தின் நெருங்கிய தோழியான ரியா சக்ரபோர்த்தி, சுஷாந்தின் மரணத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு சமூகவலதளம் மூலம் கோரிக்கை விடுத்தார்.

ரியா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சுஷாந்தின் தந்தை கே.கே.சிங், பாட்னா காவல்நிலையத்தில் புகார் அளித்தார். சுஷாந்திடம் நிதி மோசடியில் ஈடுபட்டு, மனரீதியாக துன்புறுத்தியதாக அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார். மேலும், சுஷாந்தின் தந்தை அளித்த புகாரில், சுஷாந்த் சிங்குக்கு சொந்தமான ரூ.1.5 கோடி அவருக்கு தொடர்பில்லாத வேறொரு வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளது. சுஷாந்த் சிங்கிடம் இருந்த லேப்டாப், பணம், நகைகள், கிரெடிட் கார்டுகள் போன்றவற்றை ரியாவும், அவரது குடும்பத்தினரும் திருடிவிட்டனர் என்றும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து ரியா சக்ரபோர்த்தி மீது தற்கொலைக்குத் தூண்டியது, நம்பிக்கைத் துரோகம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை பாட்னாவில் இருந்து மும்பைக்கு மாற்றக் கோரி உச்சநீதிமன்றத்தில் நடிகை ரியா மனுத் தாக்கல் செய்துள்ளார். தங்கள் தரப்பு பதிலை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கக்கூடாது எனக் கோரி சுஷாந்தின் தந்தை சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, சுஷாந்த் கடைசியாக கூகுளில் தேடிய வார்த்தைகள் என்னென்ன என்பது குறித்து மும்பை போலீஸ் தகவல் கூறியுள்ளது. கூகுளில் தனது பெயரில் என்னென்ன செய்திகள் வெளியாகியுள்ளன என்று தேடியிருக்கும் சுஷாந்த், வலியில்லா மரணம் (Painless Death), இருதுருவ நோய் எனப்படும் மனநலக் குறைபாடு (Bipolar Disorder), மனச்சிதைவு ஆகிய வார்த்தைகளையும் கூகுளில் தேடிப் படித்துள்ளார். இத்தகவலை மும்பை காவல்துறை ஆணையர் பரம்பிர் சிங் தெரிவித்துள்ளார்.

மேலும், சுஷாந்த் சிங்கின் மரணம் தொடர்பான வழக்கில் இதுவரை 56 பேரிடம் வாக்குமூலம் பெற்றிருப்பதாகவும், அதில் சுஷாந்தின் முன்னாள் காதலி ரியா சக்ரபோர்த்தியிடம் 2 முறை வாக்குமூலம் பெற்றிருப்பதாகவும், அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet