Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

பெண்களுக்கு குடும்பச் சொத்தில் பங்கு… உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை கொண்டாடும் மகளிர்..!

0 Comments

Published on: Wednesday, August 12th, 2020 at 9:40 AM

பெண்களுக்கு குடும்பச் சொத்தில் பங்கு… உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை கொண்டாடும் மகளிர்..!

குடும்ப சொத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் சம உரிமை உண்டு என்றும் அதனை யாரும் மறுக்க முடியாது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பெண்கள் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இந்து வாரிசு உரிமை சட்டத்தில் பெண்களுக்கு குடும்ப சொத்தில் சம உரிமை வழங்கும் வகையில் 2005ஆம் ஆண்டு சட்டத்திருத்தம் செய்யப்பட்டது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், 2005ஆம் ஆண்டுக்கு முன்பு பெற்றோர் உயிரிழந்திருந்தால் சொத்தின் பங்கை பெண்கள் பெற முடியாது என தெரிவித்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அதில் இந்து வாரிசு உரிமை சட்டத்தின் அடிப்படையில், குடும்ப சொத்தில் பெண்களுக்கு சம உரிமை உள்ளது என  திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. சட்டத்திருத்தம் 2005ஆம் ஆண்டு நடைமுறைக்கு வருவதற்கு முன்பே, பெற்றோர் உயிரிழந்திருந்தாலும் பெண்களுக்கு சம உரிமை உண்டு என்பதையும் உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டபோது உயிரோடிருந்தால் மட்டுமே சொத்துரிமை என்பது, சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டதன் நோக்கத்துக்கே எதிரானது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்ட போது பெண் வாரிசுகள் இறந்திருந்தால், அந்த பெண்ணுடைய வாரிசுகள் சொத்தில் உரிமை கோரலாம் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் சொத்தில் சமஉரிமை உண்டு என்ற சட்டத்திருத்தத்தை உச்சநீதிமன்றம் அங்கீகரித்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு பெண்கள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet