Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

ஒரு நொடிக்கு பல கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் சுந்தர் பிச்சை – கூகுளின் தாய் நிறுவனத்தின் தலைவரானார்…

1 Comments

Published on: Wednesday, December 4th, 2019 at 10:09 PM

கூகுள் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை வகித்து வந்த, தமிழரான சுந்தர் பிச்சை, அதன் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட்-டின் தலைமை பொறுப்பையும் ஏற்றுள்ளார்.

தமிழகத்தின் கலாச்சார தலைநகரமான மதுரையில் 1972ஆம் ஆண்டு ஒரு நடுத்தர குடும்பத்தில் சுந்தர் பிச்சை பிறந்தார். அவருடைய தந்தை ரெகுநாத பிச்சை தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றினார். சிறுவயது முதலே புத்தகங்கள் மீது தீராத காதல் கொண்டவராக வலம் வந்தவர் சுந்தர் பிச்சை. சென்னை அசோக் நகரில் உள்ள ஜவஹர் வித்யாலயா பள்ளியில் 10ஆம் வகுப்பு வரை பயின்ற சுந்தர் பிச்சை, சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள வனவாணி மெட்ரிகுலேஷன் பள்ளியில் 12ஆம் வகுப்பை முடித்தார்.

அடுத்ததாக, ஐஐடி நுழைவுத் தேர்வை எழுதிய சுந்தருக்கு, மேற்கு வங்க மாநிலம், காரக்பூர் ஐஐடியில் உலோகவியல் பொறியல் படிப்பதற்கு இடம் கிடைத்தது. முதல் முறையாக வேறு மாநிலத்தில் படிக்கச் சென்ற சுந்தர், தொடக்கத்தில் மொழி தெரியாமல் திண்டாடியுள்ளார்.

சராசரி மாணவராக ஐஐடியில் படிப்பை முடித்த சுந்தர் பிச்சை, அமெரிக்காவின் Stanford பல்கலைக்கழகத்தில், Material Science துறையில் முதுநிலை படிப்பில் சேர்ந்தார். பொறியிலில் முதுகலை பட்டம் பெற்றபின், அமெரிக்கவின் Wharton school of Business administrationல் மேலாண்மை கல்வி பயின்று MBA பட்டம் பெற்றார்.

பின்னர் Mckinsey & company என்ற உலகப் புகழ் பெற்ற தொழில் ஆலோசனை நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். சரியான வாய்ப்பிற்காக காத்துக்கொண்டிருந்த சுந்தர் பிச்சைக்கு கூகுளிலிருந்து அழைப்பு வந்தது. 2004, ஏப்ரல் 1-ஆம் தேதி, கூகுள் நிறுவனம் ஜி மெயிலை அறிமுகப்படுத்திய போது கூகுள் க்ரோம் Browserஐ உருவாக்கும் குழுவிற்கு சுந்தர் பிச்சை தலைமைப் பொறுப்பை ஏற்றார்.

கூகுள் க்ரோம் மிகப்பெரிய வெற்றியடைந்ததை தொடர்ந்து கூகுள் மேப், ஜிமெயில் ஆகியவற்றை மேம்படுத்தும் பொறுப்பு சுந்தர் பிச்சைக்கு வழங்கப்பட்டது. 2013ஆம் ஆண்டு, மொபைல் போன்களுக்கான ஆண்ட்ராய்ட் மென்பொருளை தயாரிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டது. சுந்தர் பொறுப்பேற்ற ஒரே ஆண்டில், கூகுள் நிறுவனம், 100 கோடி ஆண்ட்ராய்டு போன்களை விற்பனை செய்து சாதனை படைத்தது.

கொடுத்த பொறுப்புகள் அனைத்திலும் சாதித்து காட்டிய சுந்தர் பிச்சைக்கு தலைமை பொறுப்புகள் தானாக தேடி வந்தன. 2015ஆம் ஆண்டு, கூகுள் நிறுவனம் தனியாக பிரிக்கப்பட்ட போது அதன் தலைமை செயல் அதிகாரியாக சுந்தர் பிச்சை தேர்வானார்.

உழைப்பில் நேர்மை என்ற சுந்தர் பிச்சையின் தனிப்பட்ட குணாம்சம், கூகுள் நிறுவனத்தில் சேர்ந்த பதினைந்தே ஆண்டுகளில், அதன் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட்-டின் தலைவர் என்ற உச்சியில் சுந்தர் பிச்சையை அமர வைத்துள்ளது. தற்போது ஆல்ஃபபெட் மற்றும் கூகுள் ஆகியவற்றின் தலைவராக சுந்தர் பிச்சை இருப்பார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1COMMENTS