Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

மழைக்காடு தெரியும்… தற்கொலைக்காடு தெரியுமா…!

0 Comments

Published on: Monday, November 4th, 2019 at 7:53 PM

ஜப்பானின் fuji மாகாணத்தில் உள்ள மலையடிவாரத்தில் காணப்படும் ஆக்கிஹாரா காட்டில் வருடந்தோறும் சராசரியாக 100 வெற்று உடல்கள் கண்டெடுக்கப்படுகின்றன. இவை அனைத்தும் அங்கு வந்து தற்கொலை செய்துகொள்பவர்களினுடையது எனத் தெரிவிக்கப்படுகின்றது. இங்கு பெரும்பாலானவர்கள் மரங்களில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொள்வதுடன் தமது தற்கொலைக்கான காரணங்களையும் மரங்கள், கார்ட் போர்ட் அட்டைகள் ஆகியவற்றில் அவர்கள் எழுதுவிட்டு தமது உயிரை மாய்த்துக் கொள்வார்களாம்.

தற்கொலை காடு

ஜப்பானில் உள்ள Mount Fuji என்ற மலையில் உள்ள காடுகள் தான் உலகிலேயே அதிகமான நபர்கள் தற்கொலை செய்து கொள்ளும் 2வது இடமாக அமைந்துள்ளது. Aokigahara எனப்படும் அந்த காடுகள் தான் “தற்கொலை செய்து கொள்ள சரியான இடம்” என்று கூறப்படுகிறது. கடந்த 1950ம் ஆண்டு தொடங்கிய தற்கொலைகள் ஆண்டுக்கு 10, 30 என அதிகரித்து 2002ம் ஆண்டில் 78 என்ற எண்ணிக்கையில் உயர்ந்துள்ளது. அது மேலும் உயர்ந்து 2003 ஆம் ஆண்டு 105 என்று ஆனது. ஜப்பானை சேர்ந்த ஆன்மிகவாதிகள், அங்கு உயிரிழப்பவர்களின் ஆவிகள் அந்த காடுகளில் உள்ள மரங்களில் புகுந்து கொண்டு, அங்கு வரும் அனைவரையும் தற்கொலைக்கு தூண்டுவதாக கருதுகின்றனர்.

காட்டிற்கு உள்ளே

கடல் போல் இருக்கும் அந்த காட்டில் சாதாரணமாக அந்த இடத்தை சுற்றி பார்க்க வருபவர்கள் சற்று அடர்ந்த வனப்பகுதிக்கு சென்றுவிட்டால் அவர்களால் வழி தெரியாமல் திரும்பி வர முடியாது என்று கூறுகின்றனர் . அது மட்டுமல்லாமல், அங்குள்ள எரிமலை மண்ணில் காந்த சக்தி அதிகம் காணப்படுவதால், அந்த பகுதியில் பயன்படுத்தப்படும் திசைமானிகள் சரியான திசையை காண்பிப்பதில்லை என்ற அறிவியல் காரணமும் கூறப்படுகிறது.

கடல் போல் மரங்கள் சூழ்ந்துள்ள அந்த காடுகளில், தற்கொலைகளை தடுப்பதற்காக ஆங்கங்கே உள்ள மரங்களில் போலீசாரால் அறிவிப்பு பலகைகள் சில தொங்கவிடப்பட்டுள்ளது.ஆனால் போலிசாரின் இந்த முயற்சிகள் எதுவும் அங்கு தற்கொலை செய்ய வருபவர்களின் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்துவதாக தெரியவில்லை.எனவே ஆண்டுக்கு குறைந்தது 70 முதல் 80 பேரின் இறந்த சடலங்காவது அங்கிருந்து பெறப்படுகிறது. ஆனால் ஜப்பானிய அரசாங்கம் அந்த பகுதியை பிரபலப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கையை குறைத்து கூறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உள்ளூர் மக்கள் இந்த மலை பகுதிக்கு 3 விதமான மக்கள் வருவதாக கூறுகின்றனர்.ஒன்று, Mount Fuji-யின் அழகை காண மலையேறி வருபவர்கள். இரண்டு, தற்கொலை செய்து கொள்ளும் இடத்தை பார்வையிட வருபவர்கள் மற்றும் மூன்றாவதாக தற்கொலை செய்யும் எண்ணத்துடன் வருபவர்கள். சாதாரணமாக அந்த இடத்தை சுற்றி பார்க்க வருபவர்கள் கூட அந்த இடத்திற்கு வந்த உடன் தற்கொலை செய்யும் எண்ணத்திற்கு வந்துவிடுவதாக கூறுகின்றனர். இதற்க்கு முன்பு அங்கு இறந்தவர்களின் ஆவிகள் தான் அங்கு வருபவர்களை தற்கொலைக்கு தூண்டுவதாக மக்கள் நம்புகின்றனர்.

போலிசார் ஒருவர் கூறுகையில், இந்த பகுதியில் தற்கொலை செய்துகொண்ட ஏராளமானவர்களின் சடலங்களை நான் பார்த்துள்ளேன்.அவை பெரும்பாலும் அழுகிய நிலையிலும், மிருங்களால் குதறப்பட்டும் கிடக்கும். எனவே, இந்த இடத்தில் தற்கொலை செய்து கொள்வதில் எந்த அழகான காரணங்களும் இல்லை. ஆனாலும் இங்கு தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே தான் உள்ளது.

மேலும் இங்கிருந்து எடுக்கப்படும் சடலங்களை காட்டை சேர்ந்த தொழிலாளர்கள் அதற்கென ஒரு சிறப்பிடத்தில் வைக்கின்றனர். அவ்வாறு வைக்கப்படும் சடலங்களுடன் இரவு வேளையில் யாரேனும் ஒருவர் தங்க வேண்டும் என்று கூறுகின்றனர். இரவு நேரங்களில் அந்த சடலங்களை தனியாக வைத்தால் அந்த ஊருக்கு கெட்ட காலம் பிறக்கும் என்றும், அந்த ஆவிகள் இரவு முழுதும் கதறி அழத் தொடங்கி விடும் என்றும், மேலும் அந்த உடல்கள் தானாக நகர்ந்து செல்லும் எனவும் நம்புகின்றனர். அந்த சடலங்களுடன் தங்குபவரை rock, paper, scissors போன்ற விளையாட்டுகளின் மூலம் தேர்ந்தெடுக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet