0 Comments
Published on: Saturday, November 16th, 2019 at 2:59 PM
கடந்த ஆண்டு சுச்சிலீக்ஸ் என்ற பெயரில் பிரபல சினிமா நட்சத்திரங்களின் அந்தரங்க புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டு சர்ச்சையை உருவாக்கி பின்னணி பாடகி சுசித்ரா, தற்போது மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பின்னணிப் பாடகியான சுசித்ரா அவருடைய ட்விட்டர் பக்கத்தில் தனுஷ், டிடி எனப்படும் திவ்யதர்ஷினி, ஹன்சிகா, த்ரிஷா, அனிருத், ஆண்ட்ரியா, ராணா, ஸ்ருதிஹாசன், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அந்தரங்க வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு பல்வேறு தரப்பினருக்கு ஹார்ட் அட்டாக் வரவைத்தார்.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சுசித்ராவுக்கு மனநிலை சரியில்லை என்றும், அவருடைய ட்விட்டர் கணக்கை யாரோ ஹேக் செய்துவிட்டதாகவும் சுச்சியின் கணவர் கார்த்திக் விளக்கம் அளித்திருந்தார். ஆனால், அதனை மறுத்த சுச்சி தன்னுடைய ட்விட்டர் கணக்கை யாரும் ஹேக் செய்யவில்லை என்று கூறிய நிலையில், தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்திய இந்த சுச்சி லீக்ஸ் வீடியோவிற்கு பிறகு அவரது ட்விட்டர் கணக்கு நீக்கப்பட்டது.
இன்னும் பலரது அந்தரங்க ரகசியங்களை வெளியிடப் போவதாக அறிவித்திருந்த சுசித்ரா, அடுத்த சில மாதங்களில் அமெரிக்காவில் சென்று தங்கியிருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு குடும்பச் சொத்து பாகப்பிரிவினைக்காக சென்னைக்கு வந்தார். தனது சகோதரி சுஜிதா வீட்டில் தங்கியிருந்த அவர் திடீரென்று காணாமல் போய்விட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. மேலும், பாடகி சுசித்ரா தற்கொலை செய்து கொள்ளும் மனநிலையில் இருப்பதாகவும் புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இது தொடர்பாக பாடகி சுசித்ராவை நாம் தொடர்புகொண்டு கேட்ட போது, தான் ஓட்டலில் தங்கியுள்ளதாகவும், தனது போன் சிலமணி நேரம் சுவிட்ச் வைக்கப்பட்டிருந்ததால் தனது தங்கை புகார் கொடுத்துவிட்டதாகவும் விளக்கம் அளித்தார். தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக சகோதரி அளித்த புகாரின் காரணமாக, போலீசாரின் அறிவுறுத்தலின் படி அண்ணாநகரில் உள்ள தனியார் மனநல மருத்துவமனையில் உளவியல் ரீதியான சிகிச்சை பெற்று வருவதாகவும் சுசித்ரா கூறினார்.
நட்சத்திர விடுதி ஒன்றில் தான் தங்கி இருந்ததாகவும், ஆனால் சகோதரி கொடுத்த புகாரின் பேரில், தன்னை போலீசார் மனநல மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும் சுசித்ரா தெரிவித்துள்ளார்.
சுச்சி லீக்ஸ் விவகாரத்தில் இருந்து, தனக்கு மனநிலை பாதிக்கப்பட்டு உள்ளதாக பலரும் குற்றம்சாட்டியதாகவும், ஆனால் அமெரிக்கா சென்று மருத்துவரிடம் சிகிச்சை பெற்றபோது அதுபோன்று எந்த பாதிப்பும் இல்லை என மருத்துவர்கள் தனக்கு தைரியம் அளித்ததாகவும் சுசித்ரா கூறியுள்ளார்.
தொடர்ந்து உறவினர்களும் மற்றவர்களும் நம்பாமல் சென்னையில் உள்ள தனியார் மனநல மருத்துவமனையில் தனக்கு மனநலம் பாதிக்கப்பட்டது போல் சித்தரித்து சிகிச்சை கொடுத்து வருவதாகவும் பாடகி சுசித்ரா வேதனை தெரிவித்துள்ளார். தற்கொலை செய்யும் மன நிலையில்தான் இல்லை என்பதை நிரூபிக்கவே தற்போது சான்றிதழ் பெறுவதற்காக சிகிச்சை பெற்று வருவதாகவும் பாடகி சுசித்ரா தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வரும் சுசித்ரா தனது தங்கை கொடுத்த புகாரில், மீண்டும் லைம் லைட்டிற்கு வந்துள்ளார். தனது குடும்பத்தினர் கூறும் குற்றச்சாட்டில் இருந்து சுசித்ரா விடுபடுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்…
No comments yet