Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி மீண்டும் மாற்றம்… புதிய தேர்வு அட்டவணை வெளியீடு…

1 Comments

Published on: Tuesday, May 19th, 2020 at 6:50 PM

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி மீண்டும் மாற்றம்… புதிய தேர்வு அட்டவணை வெளியீடு…

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை மீண்டும் தள்ளிவைத்துள்ள தமிழக அரசு, புதிய தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது.

கடந்த மார்ச் 24ஆம் தேதியுடன் பிளஸ் 2 தேர்வுகள் முடிந்த நிலையில், பிளஸ் 1 தேர்வுகள் மார்ச் 26ஆம் தேதி வரை நடைபெற இருந்தன. ஆனால் கொரோனா ஊடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், பிளஸ் 2 விடைத்தாள்கள் திருத்தும் பணி, பிளஸ் 1 மற்றும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு என அனைத்தும் நடத்த முடியாமல் போனது.

இந்நிலையில், கொரோனா பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மற்றும் பிளஸ் 1 தேர்வுகள் நடத்த அரசு திட்டமிட்டது. அதன்படி, 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன்1ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரையும், விடுபட்டுபோன பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுகள் ஜூன் 2 மற்றும் 4ஆம் தேதி நடைபெறு என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், கொரோனா காலத்தில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவது அவர்களது மனநிலையை பாதிக்கும், அவர்கள் அச்சப்படுவார்கள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தேர்வை ஒத்திவைக்க கோரினர். அதேபோல், தேர்வை தள்ளிவைக்கக் கோரி, உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவரும் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி மாற்றப்படுவதாக அறிவித்தார். அதன்படி, ஜூன் 15ஆம் தேதி முதல் ஜூன் 25ஆம் தேதி வரை 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எஞ்சிய 11ஆம் வகுப்பு தேர்வு ஜூன் 16ஆம் தேதியும், 12ஆம் வகுப்பு மறு தேர்வு ஜூன் 18ஆம் தேதியும் நடைபெறும் என தெரிவித்தார்.

10ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை

ஜூன் 15 – மொழிப்பாடம்
ஜூன் 17 – ஆங்கிலப் பாடம்
ஜூன் 19 – கணிதம்
ஜூன் 20 – மொழிப்பாடம் (விருப்பத் தேர்வு)
ஜூன் 22 – அறிவியல்
ஜூன் 24 – சமூக அறிவியல்
ஜூன் 25 – தொழிற்கல்வி தேர்வு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1COMMENTS