Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது… ஆனா கூட்டமே இல்ல…

0 Comments

Published on: Friday, May 22nd, 2020 at 8:20 PM

ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது… ஆனா கூட்டமே இல்ல…

ஜூன் 1ஆம் தேதி முதல் இயக்கப்படும் ரயில்களுக்கு சென்னை சென்ட்ரல் உள்ளிட்ட குறிப்பிட்ட நகரங்களில் உள்ள டிக்கெட் கவுன்டர்களில் முன்பதிவு தொடங்கியுள்ளது.

ஊரடங்கு தளர்வுகளை முன்னிட்டு, நாடு முழுவதும் ரயில் சேவையை ஜூன் 1ஆம் தேதியில் இருந்து படிப்படியாக தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா, திருவனந்தபுரம் உள்ளிட்ட நகரங்களுக்கு 200 ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

இதற்காக ஆன்லைனில் முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில், டிக்கெட் கவுன்டர்கள் மற்றும் பொது சேவை மையங்கள் மூலம் இன்று காலை 8 மணி முதல் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 2 கவுன்டர்களில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது.

சென்னையில் இருந்து டெல்லிக்கு வாரத்திற்கு இரண்டு ரயில்கள் இயக்கப்படும் நிலையில், பெரும்பாலானோர் ஆன்லைனில் புக் செய்துவிட்டதால், டிக்கெட் கவுன்டர்களில் பதிவு செய்ய பயணிகள் யாரும் வரவில்லை. இதன் காரணமாக டிக்கெட் கவுன்டர்களில் கூட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டது.

கவுன்டர்களுக்கு வரும் பயணிகள் அனைவரும் முகக் கவசம் அணிந்து வருவதுடன், தனிமனித இடைவெளியை கடைபிடித்து டிக்கெட் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று நாடு முழுவதும் 1 லட்சத்து 70 ஆயிரம் பொது சேவை மையங்களில் ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet