0 Comments
Published on: Tuesday, November 10th, 2020 at 11:13 AM
பாஜகவும்… போலி பக்தியும்… அம்பலமான அரசியல் ஆட்டம்…
தமிழகத்தில் எப்படியாவது துளிர்விட்டு விட வேண்டும் என நினைக்கும் பாஜக, பல்வேறு போலியான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதை சமூகவலைதளவாசிகள் தோலுரித்து காட்டி வருகின்றனர்.
நாட்டின் வளர்ச்சி, வேலைவாய்ப்பு, வறுமை ஒழிப்பு, சிறுதொழில் மேம்பாடு குறித்து எப்போதும் பேச மறுக்கும் பாஜக, ஒவ்வொரு மாநிலத்திலும் மத உணர்வுகளை வைத்தே அரசியல் செய்து வருவதை சமூகவலைதளவாசிகள் பட்டியலிட்டுள்ளனர். மேற்கு வங்கத்தில் காளி, உத்தர பிரதேசத்தில் ராமர் கோயில், கேரளாவில் ஐயப்பன் என தொடர்ந்து கடவுள்களை வைத்து மட்டுமே அரசியல் செய்து வரும் பாஜக, தமிழகத்தில் பிரபலமான முருகனை கையில் எடுத்திருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.
பல ஆண்டுகளாக ராமரையும், விநாயகரையும் வைத்து தமிழகத்தில் அரசியல் செய்த பாஜகவுக்கு, அந்த கடவுள் அரசியலால் எந்த நன்மையும் கிடைக்கவில்லை எனக் கூறி, தற்போது முருகனுக்கு தாவி இருப்பதாக விமர்சிக்கின்றனர். ஏனென்றால் தமிழகத்தில் பரவலாக முருகன் வழிபாடு உள்ளது. அதை தொட்டு அரசியல் செய்தால், வளர்ந்துவிடலாம் என்ற எண்ணத்திலேயே பாஜக இருப்பதாகக் கூறும் சமூகவலைதளவாசிகள், பழனிக்கு பாத யாத்திரை செல்லும் பக்தர்களையும், வேலுடன் போராட்டம் நடத்தும் பாஜகவினரையும் ஒப்பிட்டு வெளியிட்டுள்ள படம், சமூகவலைதளங்களில் வைரல்.
கடவுள் பக்தி மிக்கவர்கள், கோயிலுக்குள் செல்லும்போது மட்டும் அல்லாமல், தூரத்தில் இருந்து கோயிலை பார்த்துக் கும்பிடும்போதுகூட, காலணியை கழற்றி வைத்துவிட்டுதான் கும்பிடுவார்கள். ஆனால், இந்து மதத்திற்கே நாங்கள்தான் ஏஜெண்ட் என்பதுபோல கூறி வரும் பாஜகவினர், முருகனின் வேலை கையில் பிடித்துக் கொண்டு, காலணியையும் அணிந்திருப்பதை சுட்டிக்காட்டும் விமர்சகர்கள், இதுதான் பாஜகவின் போலி கடவுள் பக்தி என்றும் வறுத்தெடுக்கின்றனர். மேலும், முருகனை வைத்து அரசியல்தான் செய்கிறோம் என பாஜகவினர் சிலர் அண்மையில் கூறியதையும் சுட்டிக் காட்டுகின்றனர்.
அதேபோல், சுதந்திர போராட்டத்தில் முழுக்க முழுக்க ஆங்கிலேயருக்கு ஆதரவாக இருந்த பாஜக முன்னோடிகள், தற்போது நமக்கு தேசப் பக்தியை கற்றுக் கொடுக்க முயற்சிப்பதாக கூறும் சமூகவலைதளவாசிகள், பாஜகவின் போலி தேசப் பக்திக்கு, சுதந்திர தினத்தன்று கட்சி கொடிக்கம்பத்தில், தேசியக் கொடியையும் ஏற்றியதையும் சுட்டிக் காட்டுகின்றனர். பாஜக கொடி கம்பத்தில் தேசியக் கொடியை ஏற்றியதால் போலீஸ் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருவதை சுட்டிக்காட்டும் சமூகவலைதளவாசிகள், தேசியக் கொடிக்கு வணக்கம் செலுத்தாமல்போனதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை குற்றஞ்சாட்ட கொஞ்சமும் அருகதை இல்லாதவர்கள் என்றும் சாடி வருகின்றனர்.
No comments yet