0 Comments
Published on: Friday, August 14th, 2020 at 10:34 PM
எஸ்.பி.பி… இளையராஜா வெளியிட்ட உருக்கமான வீடியோ… மனோபாலா ட்வீட் செய்த படம்…
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை தெரிவித்துள்ள நிலையில், எஸ்.பி.பி. சிகிச்சையில் இருக்கும்போது கைவிரலை உயர்த்தியபடி இருக்கும் புகைப்படத்தை மனோபாலா ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கடந்த வாரம் சென்னையில் சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, தன்னை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும், தான் நலமாகவே இருப்பதாகவும் வீடியோ ஒன்றை எஸ்.பி.பாலசுப்பிரமணியம் வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், அவரது உடல்நிலை மோசமடைந்து விட்டதாகவும், கவலைக்கிடமாக உள்ளதாகவும், மருத்துவமனை நிர்வாகம் இன்று மாலை அறிக்கை வெளியிட்டது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதையடுத்து, அவர் விரைவில் உடல் நலம் பெற வேண்டி, அனைவரும் பிரார்த்திக்குமாறு இயக்குநர் பாரதிராஜா, நடிகர்கள் பார்த்திபன், தனுஷ், பிரசன்னா, யோகிபாபு உள்ளிட்டோர் ட்விட்டரில் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதேபோல், இசையமைப்பாளர்கள் ஏ.ஆர்.ரகுமான், அனிருத், தமன் உள்ளிட்டோரும், நடிகைகள் குஷ்பூ, ராதிகா, பாடகி சின்மயி ஆகியோரும், எஸ்.பி.பி. விரைந்து நலம் பெற வேண்டும் என ட்விட்டரில் பதிவிட்டிருந்தனர்.
என் நண்பன்
பாலு,
தன்னம்பிக்கையானவன்..
வலிமையானவன்..
அவன் தொழும் தெய்வங்களும்
நான் வணங்கும்
இயற்கையும்
அவனை உயிர்ப்பிக்கும்..
மீண்டு வருவான்
காத்திருக்கிறேன்.அன்புடன்
பாரதிராஜா pic.twitter.com/8gyemadGpg— Bharathiraja (@offBharathiraja) August 14, 2020
இதைத் தொடர்ந்து, இசையமைப்பாளர் இளையராஜாவும், ”எழுந்து வா பாலு” என உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Get well soon SPB Sir pic.twitter.com/cGFwW1GhlJ
— Nikil Murukan (@onlynikil) August 14, 2020
இதனிடையே, எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை சீராக இருப்பதாக, அவரது மகன் எஸ்.பி.பி.சரண் ஊடகங்களுக்கு தெரிவித்தார். அதை உறுதிபடுத்தும் விதமாக, நடிகர் மனோபாலா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, ”அண்ணா வாங்க வாங்க” என்று பதிவிட்டிருந்தார். அந்த புகைப்படத்தில், சிகிச்சையில் இருக்கும் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கையின் கட்டைவிரலை உயர்த்தியபடி, சிரித்துக் கொண்டிருக்கிறார்.
Anna..vanga vanga.. pic.twitter.com/8meLd4YsvX
— manobala (@manobalam) August 14, 2020
இதைப் பார்த்த ரசிகர்கள் ஓரளவு நிம்மதியடைந்த நிலையில், மனோபாலா பதிவிட்டது, எஸ்.பி.பி.பாலசுப்பிரமணியம் ஏற்கெனவே இதய அறுவைச் சிகிச்சை செய்து கொண்டபோது எடுத்த புகைப்படம் என்பது தெரியவந்துள்ளது. இருப்பினும், அவர் நலமுடன் வீடு திரும்ப வேண்டும் என்பதே ரசிகர்கள் ஆசை.
No comments yet