Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

சாந்தி டீச்சர் தற்கொலை ஏன்…? போலீஸ் விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்…

0 Comments

Published on: Thursday, December 19th, 2019 at 10:03 PM

சென்னையில் வகுப்பறையிலேயே பள்ளி ஆசிரியை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், காதல் தோல்வியே மரணத்திற்கு காரணம் என்பது தெரியவந்துள்ளது.

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள வைஷ்ணவா கல்லூரியில் தெலுங்கு பாடப் பிரிவில் பேராசிரியராக இருந்த ஹரிசாந்தி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அரசுத் தேர்வில் தேர்ச்சிப் பெற்று, அரசுப் பள்ளி ஆசிரியராக பணியாற்றி வந்தார். இருப்பினும், அவர் அடிக்கடி தான் பணியாற்றி வந்த வைஷ்ணவா கல்லூரிக்குச் சென்று வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். இந்நிலையில், கடந்த புதன்கிழமை, பேராசிரியராக இருந்தபோது பாடம் பயிற்றுவித்த வகுப்பறையில் ஹரி சாந்தி தூக்கில் தொங்கினார்.

அவரது இடது கையில் சிறிய கத்தியால் கீறப்பட்ட காயங்கள் இருந்தன. இதையடுத்து போலீசார் விசாரணை செய்தபோது, பல திடுக்கும் தகவல்கள் வெளியாகின. தெலுங்கு பாடப்பிரிவு பேராசிரியராக இருந்த ஹரி சாந்திக்கும், அதே பிரிவில் துறைத் தலைவராக இருந்த நடராஜ் என்பவருக்கும் இடையே நீண்ட காலமாக காதல் இருந்து வந்துள்ளது. இதனால், இருவரும் பலமுறை எல்லை மீறி, உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடராஜுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. ஆனால், பலமுறை உல்லாசமாக இருந்துவிட்டதால், அவரை மறக்க முடியாமல் தவித்த ஹரி சாந்தி, தன்னை இரண்டாவது திருமணம் செய்து கொள்ளுமாறு அடிக்கடி நடராஜிடம் வற்புறுத்தி வந்துள்ளார். அப்போதெல்லாம் அவரை ஏதாவது சமாதானம் செய்து சமாளித்த நடராஜ், அவ்வப்போது தனக்கு தேவை ஏற்படும்போது ஹரி சாந்தியை அழைத்து உல்லாசமாக இருந்துள்ளார்.

தன்னை அனுபவிப்பதில் காட்டும் ஆர்வத்தை, திருமணத்தில் காட்டவில்லை என கோபம் கொண்ட ஹரி சாந்தி, அடிக்கடி பள்ளி முடிந்து வீடு செல்லும்போது, வைஷ்ணவா கல்லூரிக்குச் சென்று நடராஜிடம் தகராறு செய்துள்ளார். நடராஜ் தொடர்ந்து சமாதானம் சொன்னபோதும், அதை ஏற்காத ஹரி சாந்தி, உனது வீட்டுக்கு வந்து நியாயம் கேட்பேன் என மிரட்டியுள்ளார். இதனால், இருவருக்கும் இடையே தகராறு முற்றியது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில்தான், செவ்வாய்க்கிழமை மாலை வைஷ்ணவா கல்லூரிக்கு சென்ற ஹரி சாந்தி, தனது காதலன் நடராஜனை சந்தித்து பேசியுள்ளார். அப்போது மீண்டும் இருவருக்குள்ளும் சண்டை நடந்துள்ளது. பின்னர் நடராஜ் வீட்டுக்குச் சென்றதும், தான் பாடம் கற்றுக் கொடுத்த வகுப்பறையிலேயே நீண்ட நேரம் இருந்த ஹரி சாந்தி, தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இருப்பினும், கொலையாக இருக்கவும் வாய்ப்பு இருப்பதால், தெலுங்கு பாடப்பிரிவு துறை தலைவர் நடராஜனிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet