Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

நடிகர் அஜித் வீட்டில் சோதனையா…? ட்விட்டரில் தொடங்கியது யுத்தம்…

0 Comments

Published on: Wednesday, December 18th, 2019 at 8:52 PM

நடிகர் அஜித்குமார் வீட்டில் சோதனை நடைபெற்றதாக தகவல் வெளியாகி, ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சோதனையே நடைபெறவில்லை என வனத்துறை விளக்கம் அளித்துள்ளது.

நடிகர் அஜித்குமார் தற்போது வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் முழு மூச்சாக நடித்து வருகிறார். அவரது படத்தை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருக்கும் வேளையில், அஜித்குமாரின் சினிமா பி.ஆர்.ஓ.வாக பணியாற்றி வரும் சுரேஷ் சந்திரா, மலைப்பாம்பு வளர்ப்பதாக சமூகவலைதளங்களில் செய்தி பரவியது. இதன் அடிப்படையில் சென்னை திருவான்மியூரில் உள்ள நடிகர் அஜித் வீட்டிலும் சோதனை நடைபெற்றதாக விஷமிகள் வதந்தி பரப்பினர்.

இந்த நிலையில்,  நடிகர் அஜித் வீட்டில் சோதனையே நடைபெறவில்லை என்றும், அவ்வாறு வெளியான தகவல் பொய்யானது என்றும் சென்னை வனச்சரகர் மோகன் விளக்கம் அளித்துள்ளார். நடிகர் அஜித்தின் பி.ஆர்.ஓ. சுரேஷ் சந்திரா வீட்டில் மலைப்பாம்பு வளர்க்கப்படுவதாக இதுவரை எந்த புகாரோ, குற்றஞ்சாட்டோ வரவில்லை என்றும், இதனால் வழக்கோ, விசாரணையோ நடைபெறவில்லை என்றும் கூறினார்.

இதனிடையே, மலைப்பாம்பு விவகாரம் குறித்து விளக்கம் அளித்த பி.ஆர்.ஓ. சுரேஷ் சந்திரா, தான் மலைப்பாம்பு எதுவும் வளர்க்கவில்லை என்றும், அது தொடர்பாக சோதனையும் நடைபெறவில்லை என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில், இந்த விவகாரத்தை கையில் எடுத்த விஜய் ரசிகர்கள், ட்விட்டரில் ட்ரோல் செய்யத் தொடங்கினர். இதற்கு அஜித் ரசிகர்கள் பதிலடி கொடுத்ததால், இரு தரப்பினரும் ஒவ்வொரு ஹேஷ்டேக்கை உருவாக்கி, ட்வீட் செய்யத் தொடங்கிவிட்டனர். மலைப்பாம்பு விவகாரம் தற்போது மகா யுத்தமாக உருவெடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet