Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

போதைக்கு அடிமையாகி, மெடிக்கலில் உல்லாசம் – கல்குவாரியில் சடலமாக கிடந்த இளம்பெண்..!

0 Comments

Published on: Friday, December 20th, 2019 at 9:38 PM

இளம்பெண்ணை போதைப்பழக்கத்துக்கு அடிமையாக்கி, அவரை பலமுறை பாலியல் இச்சைக்கு பயன்படுத்திய பின், கொலை செய்து கல்குவாரியில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் சத்துவாச்சாரியை அடுத்த புதுவசூர் மலைப்பகுதியில் உள்ள கல்குவாரியில் கடந்த புதன்கிழமை, 17 வயது இளம்பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். அவரது உடலைக் கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, அரியூர் பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.

12ஆம் வகுப்பு முடித்து விட்டு வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் உள்ள கேண்டீனில் பகுதிநேரமாக வேலைபார்த்து வந்த இளம்பெண், கடந்த 14ம் தேதி வழக்கம் போல் வேலைக்குச் சென்றுள்ளார். அப்போது, மருத்துவமனை கேண்டீனில் முழு நேரப் பணியில் சேருவதற்கு, பள்ளிச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ் கேட்டதாகக் கூறி, அவற்றை எடுத்துச் சென்றுள்ளார்.

மருத்துவமனையில் பிற்பகல் 2 மணியளவில் வீட்டுக்குச் செல்வதாகக் கூறி வெளியே வந்த அவர், அந்த வளாகத்திலேயே ஒரு ஆணுடன் சிரித்துப் பேசியுள்ளார். இந்த காட்சிகள், அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. அந்த நபர் சென்ற சிறிதுநேரத்தில், வேறு ஒரு ஆட்டோவில் ஏறி, சென்றுள்ளார் இளம்பெண்.

அதன்பிறகு சடலமாகவே மீட்கப்பட்டதால், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், இளம்பெண்ணின் செல்போனையும் ஆய்வு செய்தனர். அதில், அரியூரில் உள்ள  மெடிக்கல் உரிமையாளர் சதீஷ் என்பவருடன் அவர் அதிக நேரம் பேசியிருப்பதை அறிந்து, அவரைப் பிடித்து விசாரித்தபோது பல திடுக்கிடும் உண்மைகள் தெரியவந்துள்ளன.

இளம்பெண் 10ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது, அரியூரில் மெடிக்கல் நடத்தி வரும் சதீஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவரைப் பார்க்க அடிக்கடி மெடிக்கல் கடைக்குச் சென்ற மாணவி ஒருநாள் குளிர்பானத்தில் சிறிதளவு மதுவை கலந்து குடித்துள்ளார். அதை குடித்த மாணவிக்கு லேசாக போதை ஏறிய நிலையில், அவரது உணர்வை தூண்டும் வகையில் உடலில் பல பாகங்களில் தடவியுள்ளார் சதீஷ்.

வீட்டுக்குச் சென்ற மாணவி, மறுநாள் பள்ளிக்குச் செல்லாமல், மெடிக்கல் கடைக்கு வந்துள்ளார். சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த மாணவி, முந்தைய நாள் கொடுத்த குளிர்பானத்தை கொடுக்குமாறு கேட்டுள்ளார். மாணவி தனது வலையில் விழுந்துவிட்டதை உணர்ந்த சதீஷ், குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்த உண்மையைக் கூறிவிட்டு, மீண்டும் மதுவை கொடுத்துள்ளார்.

அதைக் குடித்த மாணவிக்கு போதை தலைக்கேறியதால், மெடிக்கல் கடையிலேயே வைத்து, அவரை பாலுறவு கொண்டுள்ளார் சதீஷ். தான் சீரழிக்கப்படுவது தெரிந்தாலும், போதைக்கு அடிமையான மாணவி, சதீஷுடன் பலமுறை, பல இடங்களுக்குச் சென்று மதுபோதையில் உல்லாசமாக இருந்துள்ளார்.

பள்ளிக்கு வரும் மாணவி, மெடிக்கல் கடைக்குச் சென்று அங்கேயே பல மணி நேரங்கள் இருப்பதை மோப்பம் பிடித்த பள்ளிக் காவலர் பாலகிருஷ்ணன், ஒருநாள் சதீஷும், மாணவியும் உல்லாசமாக இருப்பதை கையும் களவுமாக பிடித்துள்ளார். வீட்டில் சொல்லிவிடுவேன் என மிரட்டியதால், அவரும் பாலுறவு கொள்ள சம்மதித்துள்ளார் மாணவி.

சதீஷும், பாலகிருஷ்ணனும் மாணவியை மது போதைக்கு அடிமையாக்கி, பலமுறை உல்லாசம் அனுபவிப்பதை அறிந்து பதறிப்போன பெற்றோர், இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.  இருவரையும் அழைத்து போலீசார் கண்டித்து அனுப்பியதால், அதன்பிறகு மாணவிக்கு அவர்கள் தொந்தரவு அளிக்காமல் இருந்துள்ளனர். இதனிடையே பிளஸ் டூ முடித்த மாணவி, அதன்பிறகு படிப்பு ஏறாததால், வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் தனது உறவினர் ஒருவர் மூலம் பகுதி நேரப் பணியாளராக வேலைக்குச் சேர்ந்தார்.

அங்கு வேலைக்குச் சேர்ந்த சில நாட்களிலேயே மீண்டும் மெடிக்கல் உரிமையாளர் சதீஷுடன் தொடர்பு ஏற்படுத்தியுள்ளார் இளம்பெண். பழைய குருடி கதவைத் திறடி என்பதுபோல, மீண்டும் போதைப்பழக்கத்திற்கு அடிமையாகி, சதீஷின் பாலியல் இச்சைக்கு இரையாகியுள்ளார் இளம்பெண். இந்த நிலையில்தான், கடந்த புதன்கிழமை கல்குவாரியில் சடலமாக மீட்கப்பட்டார். இதையடுத்து, அவரது செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்து வரும் போலீசார், இளம்பெண்ணின் மரணத்திற்கான காரணத்தை விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet