Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

தென்னந்தோப்பில் ஒதுங்கிய மாணவி – கர்ப்பத்தை கலைக்க சாப்பிட்ட மாத்திரையால் உயிருக்கு போராட்டம்…

0 Comments

Published on: Sunday, January 5th, 2020 at 11:37 AM

பள்ளி மாணவியை காதல் வலையில் வீழ்த்தி அவரை கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவர் ஒருவர், கருக்கலைப்பும் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டை காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட கிராமத்தைச் சேர்ந்த பிளஸ் ஒன் மாணவி ஒருவரின் பெற்றோர் வெளியூரில் தங்கி கட்டிட வேலை பார்த்து வருகின்றனர். இதனால், அதனால் மாணவி தனது பாட்டி வீட்டில் தங்கி படித்து வருகிறார்.

அந்த மாணவியின் கிராமத்தைச்  சேர்ந்த வசந்த் என்ற இளைஞன், ராசிபுரம் திருவள்ளுவர் அரசுக் கலைக் கல்லூரியில் படித்து வருகிறான். இவனுக்கும், பள்ளி மாணவிக்கும் பேருந்தில் ஒன்றாக செல்லும்போது ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியுள்ளது.

கடந்த ஓராண்டாக இருவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாணவியை ஆசை வார்த்தைக் கூறி தென்னந்தோப்புக்கு அழைத்துச் சென்று, உல்லாசமாக இருந்துள்ளான். அதன்பிறகு ருசி கண்ட பூனையாக வாய்ப்பு கிடைக்கும் நேரத்தில் எல்லாம் மாணவியுடன் உல்லாசம் அனுபவித்துள்ளான்.

படிப்பை தொலைத்த மாணவி, கல்லூரி மாணவன் மீதான காதல் மயக்கத்தில் இருந்து மீள்வதற்குள் அவர் கர்ப்பமடைந்தார். இதையடுத்து அதிர்ச்சியடைந்த மாணவி, தன்னை உடனடியாகத் திருமணம் செய்யும்படி வற்புறுத்தியுள்ளார்.

கருவைக் கலைத்தால் திருமணம் செய்வதாக மீண்டும் ஏமாற்றிய வசந்த், அங்குள்ள மெடிக்கல் கடையில் இருந்து கருக்கலைப்புக்கான மாத்திரைகளை வாங்கிக் கொடுத்துள்ளான். மாணவி 5 மாத கர்ப்பமாக இருந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வசந்த் கொடுத்த மாத்திரைகளை சாப்பிட்டுள்ளார் மாணவி.

வயிற்றில் சிசு ஓரளவு வளர்ந்துவிட்டதால், கருகலைப்பு மாத்திரையை சாப்பிட்டதும் கடுமையான உதிரப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதையறியாத பாட்டியும் அக்கம்பக்கத்தினரும் உடனடியாக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் உண்மையை போட்டு உடைத்தபோது, பாட்டியும், அக்கம்பக்கத்தினரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனிடையே, மாணவியின் உடல்நிலை மிகவும் மோசமானதால், கர்ப்பப் பையையே நீக்கும் நிலை ஏற்பட்டுள்ளது; மாணவி உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார். மாணவியின் தாத்தா அளித்த புகாரின் பேரில், கல்லுாரி மாணவன் வசந்தை கைது செய்த போலீசார், அவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

படிக்க வேண்டிய வயதில் காதல் மயக்கத்தில் விழுந்தால், உடலை மட்டுமல்ல, உயிரையும் விடும் நிலை ஏற்படும் என்பதையே இந்த சம்பவம் காட்டுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet