Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

பள்ளி மாணவருடன் உல்லாசமாக இருந்த மாணவி – கண்டித்த இளம்பெண் கொலை…

0 Comments

Published on: Saturday, November 30th, 2019 at 2:06 PM

கொடைக்கானலில் காதலனுடன் உல்லாசமாக இருப்பதற்கு தடையாக இருந்த இளம்பெண்ணை  பள்ளி மாணவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல்  அருகே உள்ள பண்ணைக்காடு பகுதியைச் சேர்ந்த கேசவனும், அவரது மனைவி சுந்தரியும் கருத்து வேறுபாடு காரணமாக 3 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து விட்டனர். இவர்களது 11 வயது மகளை தந்தை கேசவன் வளர்த்து வருகிறார்.

இந்த நிலையில், கணவரை பிரிந்த  சுந்தரி அதே பகுதியில் உள்ள முருகானந்தம் என்பவருடன் ஒன்றாக வாழ்ந்து வந்தார். தற்போது, முருகானந்தம்  சென்னையில் வேலை பார்த்து வருவதால், சுந்தரி மட்டும் முருகானந்தம்  வீட்டில் இருந்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, சுந்தரி வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதை பார்த்த முருகானந்தத்தின் சகோதரி மகள், தனது தாய் மற்றும் அக்கம்பக்கத்தினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

அவர்களும் தாண்டிக்குடி போலீசாருக்கு தகவல் அளித்தனர். விரைந்து சென்ற போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி  வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டபோதுதான், சுந்தரி கொலை செய்யப்பட்டது அம்பலமானது.

முருகானந்தத்தின் சகோதரி மகளான 11ஆம் வகுப்பு  படிக்கும் மாணவியும், அவருடன் படிக்கும் 16 வயது மாணவரும் காதலித்து வந்துள்ளனர். காதல் கண்ணை மறைத்ததால், எல்லை மீறுவதை வழக்கமாக கொண்ட அவர்கள் இருவரும், அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். இதற்கு, முருகானந்தத்தின் அடுக்குமாடி வீட்டை இருவரும் பயன்படுத்தியுள்ளனர்.

கொலை நடந்ததற்கு முதல்நாள் இரவு முருகானந்தத்தின் வீட்டுக்கு சென்ற இருவரும் 3 அடுக்கு கொண்ட வீட்டின் இரண்டாவது தளத்தில் தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர்.

எதார்த்தமாக அங்கு சென்ற சுந்தரி, இருவரும் அரை நிர்வாணக் கோலத்தில் இருந்ததைப் பார்த்து அதிர்ந்துள்ளார்.  இருவரையும் அழைத்து கண்டித்த சுந்தரி, இனி இதுபோன்று நடந்தால் பெற்றோரிடம் சொல்லிவிடுவேன் என மிரட்டியுள்ளார். இதையடுத்து, இருவரும் சுந்தரியிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு, அங்கிருந்து சென்று விட்டனர்.

சுந்தரி சரி என்று சொன்னாலும், தாங்கள் தவறு செய்ததை பெற்றோரிடம் சொல்லிவிட்டால் என்ன செய்வது என பயந்த இருவரும், மீண்டும் அதே வீட்டுக்கு வந்துள்ளனர். சுந்தரி தனிமையில் இருப்பதை உறுதி செய்து கொண்ட இருவரும் மறைந்து மறைந்து சென்று, சுந்தரியின் கழுத்தை தனது துப்பட்டாவால் இறுக்கி கொலை செய்துள்ளார் மாணவி. இதற்கு மாணவரும் உடந்தையாக இருந்துள்ளார்.

சுந்தரியை கொலை செய்த பிறகு, அந்த மாணவர் திண்டுக்கல் சென்றுவிட, மாணவி அந்த வீட்டின் இரண்டாவது மாடியில் உள்ள அறைக்கு சென்று தூங்கியுள்ளார்.

விடிந்த பிறகு சுந்தரி வீட்டுக்கு யாரும் வராததால், சுந்தரி மர்மமான முறையில் இறந்துவிட்டதாக மாணவியே தனது தாய் மற்றும் அக்கம் பக்கத்தினருக்கு தகவல் கொடுத்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து மாணவியை கைது செய்த காவல்துறையினர், அவரை மதுரை சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர். கொலை செய்துவிட்டு தப்பி ஓடி தலைமறைவாக உள்ள 11ஆம் வகுப்பு மாணவரையும் தேடி வருகின்றனர். கொலையின்போது, சுந்தரி அணிந்திருந்த நகை மற்றும் அவர் வைத்திருந்த பல லட்ச ரூபாய் பணமும் காணாமல் போனதாக சொல்லப்படுகிறது. இது  தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet