0 Comments
Published on: Monday, August 10th, 2020 at 8:55 AM
சாத்தான்குளம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சிறப்பு எஸ்.ஐ. பால்துரை – மருத்துவமனையில் உயிரிழப்பு…
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சிறப்பு எஸ்.ஐ. பால்துரை கொரோனா தொற்றால் மதுரை மருத்துவமனையில் உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் மரண வழக்கை கொலை வழக்காக மாற்றி சிபிஐ விசாரித்து வருகிறது. இதில், ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்பட 10 போலீசார் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சிறப்பு எஸ்.ஐ. பால்துரை, மதுரையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு மேற்கொண்ட சோதனையில், கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது.
இதையடுத்து, சிறப்பு எஸ்.ஐ. பால்துரைக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐ அதிகாரிகள் 5 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
No comments yet