0 Comments
Published on: Wednesday, June 24th, 2020 at 9:56 PM
கள்ளக்காதலனை வீட்டிற்கு வரவழைத்து உல்லாசம்… பதுங்கியிருந்து பாய்ந்து கொன்ற கணவன்…
சேலத்தில் மனைவியின் 4 ஆண்டு கள்ளக்காதலனை வீட்டிற்கு வரவழைத்து, பதுங்கியிருந்த கணவனே அரிவாளால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
சேலம் மாவட்டம் பனைமடல் அருகே கணேசபுரம் கணவாய்க்காடு பாலத்திற்கு அடியில் இரும்புக் கம்பிகளால் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலம் ஒன்று கிடப்பதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்திய போலீசார், அவர் வாழப்பாடி அருகே வெள்ளாளப்பட்டியைச் சேர்ந்த சதாசிவம் என்பது தெரியவந்தது.
சதாசிவத்தை கொலை செய்து வீசியது யார் என போலீசார் விசாரணையைத் தொடங்கிய நிலையில், 28 வயதான பவித்ரா என்பவர் ஏத்தாப்பூர் காவல்நிலையத்தில் சரணடைந்தார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில், அவரது கணவர் ரஞ்சித்தையும், அவரது நண்பரையும் கைது செய்தனர்.
அப்போதுதான், சதாசிவம் கொலை செய்யப்பட்டது தொடர்பான திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளன. வெள்ளாளப்பட்டியைச் சேர்ந்த ரஞ்சித்துக்கும், பவித்ராவுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இருவரது இல்லறம் நன்றாக இருந்து வந்த நிலையில், அதே ஊரைச் சேர்ந்த ஜேசிபி ஓட்டுநர் சதாசிவத்துடன் பவித்ராவுக்கு கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.
ரஞ்சித் விவசாயி என்பதால், வயல்வெளிக்குச் சென்றபிறகு, பவித்ராவின் வீட்டுக்கு வரும் சதாசிவம், உல்லாசமாக இருப்பதை வழக்கமாக்கியுள்ளார். மனைவியின் செயலை ஒரு சில மாதங்களில் தெரிந்து கொண்ட ரஞ்சித், குடும்ப மானம் போய்விடும் எனக் கூறி, கள்ளக்காதலை விட்டுவிடுமாறு கெஞ்சியுள்ளார். அப்போது சரி என்று சொன்னாலும், ரஞ்சித் இல்லாத நேரங்களில் சதாசிவத்துடன் உல்லாசமாக இருப்பதை 4 ஆண்டுகளாக தொடர்ந்துள்ளார் பவித்ரா.
பலமுறை சொல்லியும் மனைவி கேட்காததால் ஆத்திரமடைந்த ரஞ்சித், சதாசிவத்தை கொலை செய்ய முடிவு செய்து, நெருங்கிய நண்பர் குமாருடன் சேர்ந்து திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி மனைவி பவித்ராவிடம், சதாசிவத்தை வீட்டிற்கு வரவழைக்கும்படி மிரட்டியுள்ளார் ரஞ்சித். இல்லையென்றால், உன்னை கொலை செய்துவிடுவேன் என ரஞ்சித் மிரட்டியதால் பயந்துபோன பவித்ரா, வீட்டில் யாரும் இல்லை எனக் கூறி, இரவு நேரத்தில் சதாசிவத்தை அழைத்துள்ளார்.
சதாசிவம் வீட்டிற்குள் நுழைந்ததும், அங்கு பதுங்கியிருந்த ரஞ்சித்தும், குமாரும் பாய்ந்து சென்று, கட்டை மற்றும் இரும்புக் கம்பியால் தாக்கியுள்ளனர். அத்துடன் அரிவாளாலும் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதனால், ரத்த வெள்ளத்தில் விழுந்த சதாசிவம், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பின்னர் சதாசிவத்தின் கை, கால்களை இரும்புக் கம்பிகளால் கட்டி, ஆட்டைத் தூக்கிச் செல்வது போல் ரஞ்சித்தும் அவரது நண்பரும் தூக்கிச் சென்று பாலத்தின் அடியில் போட்டு விட்டு வந்து விட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இதையடுத்து, மூவரையும் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கள்ளக்காதலால் கொல்லப்பட்ட சதாசிவத்துக்கு ஏற்கனவே திருமணமாகி, 2 குழந்தைகள் இருக்கும் நிலையில், தேவையற்ற உறவால், இன்று இரு குடும்பங்கள் நிர்கதியாகியுள்ளன.
No comments yet