Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

முகக் கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் – உடனடியாக அமலுக்கு வந்த உத்தரவு…

0 Comments

Published on: Friday, May 22nd, 2020 at 9:22 PM

முகக் கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் – உடனடியாக அமலுக்கு வந்த உத்தரவு…

சென்னையில் முகக் கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்திலோ அல்லது நான்கு சக்கர வாகனத்திலோ சென்றால் 500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என சென்னை காவல் துறை அறிவித்துள்ளது.

கொரோனா பரவலைத் தடுக்க தனிமனித இடைவெளி, முகக்கவசம் அணிதல் ஆகியவற்றை பின்பற்ற வலியுறுத்தப்படுகிறது. மேலும், வாகனங்களில் குறிப்பிட்ட நபர்களுக்கு மேல் பயணிக்கக் கூடாது என்ற கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வாகனங்களில் செல்வோர் முகக்கவசம் அணியாமல் சென்றால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கூறியுள்ளார்.

நடந்து செல்வோர் முக கவசம் அணியாமல் சென்றால் அவர்களிடம் ரூ.100 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் எனவும் கூறினார். அறிவித்த சில நிமிடங்களிலேயே முகக் கவசம் அணியாது வந்த வாகன ஓட்டிகளிடம் ரூ.500 அபராதம் வசூலிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet