Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

இந்தியாவை மிரட்டிய ரவுடி விகாஸ் துபே என்கவுன்டரில் கொலை – நடந்தது என்ன?

0 Comments

Published on: Friday, July 10th, 2020 at 5:59 PM

இந்தியாவை மிரட்டிய ரவுடி விகாஸ் துபே என்கவுன்டரில் கொலைநடந்தது என்ன?

உத்தரப் பிரதேசத்தில் 8 போலீசாரை சுட்டுக் கொன்று விட்டு தப்பியோடிய பிரபல ரவுடி விகாஸ் துபே, போலீஸ் நடத்திய என்கவுன்டரில் பலியாகியுள்ளான். எப்படி நடந்தது என்கவுன்டர்…?

உத்தரப்பிரதேசம் மாநிலம் கான்பூரைச் சேர்ந்த பிரபல ரவுடி விகாஸ் துபே. பல்வேறு கொலை, கொள்ளை மற்றும் ஆள் கடத்தல் உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடைய இவனை, கடந்த ஜூலை 3ஆம் தேதி கைது செய்வதற்காக போலீசார் சென்றனர். அப்போது, விகாஸ் துபேவும், அவனது கூட்டாளிகளும் இணைந்து நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 8 போலீசார் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில், 10க்கும் மேற்பட்ட போலீசார் படுகாயமடைந்தனர்.

துப்பாக்கிச் சூடு நடத்திய ரவுடிகள் காடு வழியாக தப்பிச் சென்றுவிட்ட நிலையில், அவனை பல்வேறு தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று முன் தினம் விகாஸ் துபேவின் நெருங்கிய கூட்டாளி ஒருவன் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டான். அதைத் தொடர்ந்து தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்திய போலீசார், உஜ்ஜைனி அருகே விகாஸ் துபேவை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

உஜ்ஜைனி காவல்நிலையத்தில் அவன் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், கான்பூருக்கு அழைத்து வந்தனர். அதிகாலையில் வந்து கொண்டிருந்தபோது, ஓரிடத்தில் வைத்து விகாஸ் துபேவை என்கவுன்டரில் போலீசார் சுட்டுக் கொண்டனர்.

உஜ்ஜைனியில் இருந்து கான்பூருக்கு வந்த வழியில் கார் கவிழ்ந்துவிட்டதாகவும், அப்போது தப்பிச் செல்ல முயன்ற விகாஸ் துபேயை சுட்டுக் கொன்றதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால், உஜ்ஜைனில் கைது செய்யப்பட்ட விகாஸ் துபே டாடா சபாரி காரில் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், மகிந்திரா கார் கவிழ்ந்து அதில் இருந்து எப்படி தப்பிச் செல்ல முயன்றார் என மூத்த அதிகாரிகள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

மேலும், விகாஸ் துபேவை அழைத்துச் சென்றதாக கூறும் கார் கவிழ்ந்த நிலையிலும், கதவுகள் எதுவும் திறக்கப்படவில்லை. அதில் இருந்து விகாஸ் துபே மட்டும் எப்படி தப்பினார் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். எப்படி இருந்தாலும், இந்தியாவுக்கே அச்சுறுத்தலாக இருந்த ரவுடி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளான்அதுவே இன்றைய முக்கியச் செய்தி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet