Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

பலான காட்சிகளுக்கு பஞ்சமே இல்லை… சர்ச்சை இயக்குநரின் மிரட்டும் டிரெய்லர்..!

0 Comments

Published on: Monday, May 18th, 2020 at 4:46 PM

பலான காட்சிகளுக்கு பஞ்சமே இல்லைசர்ச்சை இயக்குநரின் மிரட்டும் டிரெய்லர்..!

பிரபல இயக்குநரின் இயக்கத்தில் தயாராகும் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ள நிலையில், அதில் ஆபாச காட்சிகள் நிரம்பி வழிவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சர்ச்சைகளுக்கு பெயர் பெற்ற இயக்குநர் என்றால், உடனே நினைவுக்கு வருபவர் ராம்கோபால் வர்மா தான். அந்த அளவுக்கு திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் குறித்து தாறுமாறாக பேசியும், ட்விட்டரில் பதிவிட்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். அண்மையில் கூட, பெண்களின் முன்னழகை வக்கிரமாக வர்ணித்து சர்ச்சையில் சிக்கினார்.

அத்துடன் நிறுத்திக் கொள்ளாத ராம்கோபால் வர்மா, தனது படங்களிலும் சர்ச்சையை மூட்டைக் கட்டி வைத்திருப்பார். இந்நிலையில், ராம் கோபால் வர்மாக்ளைமேக்ஸ்என்ற படத்தை இயக்கி வருகிறார். அமெரிக்காவின் நீலப்பட நடிகையும், ராம்கோபால் வர்மாவின் ஃபேவரைட் நடிகையுமான மியா மல்கோவா இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் டீசர் கடந்த வாரம் வெளியானது.

டீசரை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார் ராம்கோபால் வர்மா. பலான காட்சிகளுக்கு பஞ்சமில்லாத அந்த டீசரில் லிப்லாக், செக்ஸ், நிர்வாணக் குளியல் என பல காட்சிகள் இடம்பெற்றிருந்தன. அதை இதுவரை சுமார் 15 லட்சம் பார்த்துள்ளனர்இந்நிலையில், க்ளைமேக்ஸ் படத்தில் டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. இதையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ராம்கோபால் வர்மா. அதில் ரெட் ஹாட் மியா மல்கோவாவின் க்ளைமேக்ஸ் படத்தின் எரிக்கும் ஹாட் ட்ரெயிலர்ப்ளீஸ் ஸ்டே கூல் என பதிவிட்டுள்ளார்.

அந்த டிரெய்லரில் காதல் ஜோடி ஒன்று, ஜீப்பில் பாலைவனத்திற்கு செல்கிறது. உள்ளே வராதே என்று எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையிலும் அந்த காதல் ஜோடி பாலைவனத்திற்குள் காம போதையுடன் செல்கிறது. பாலைவனத்தில் உள்ள ஒரு குளத்தில் இருவரும் ஒருவர் மாறி ஒருவர் உடையை அவிழ்த்துவிட்டு குளிக்கின்றனர். பின்னர் இருவரும் பாலைவனத்தில் டெண்ட் அடித்து, உடலுறவில் ஈடுபடுகின்றனர். இப்படியாக நீள்கிறது டிரெய்லர்

பின்னர் இருவரையும் ஒரு கும்பல் பாலைவனத்தில் விரட்டுகிறது. கையில் கிடைக்கும் காதலனை அடித்து நொறுக்கும் அந்த கும்பல், அவரை தூக்கிச் செல்கிறது. இந்த மிரட்டல் கும்பலில் கவர்ச்சியான பெண்களும் உள்ளனர். பின்னர் தனது காதலனை தேடி அலைகிறார் மியா மல்கோவா.

இதனைத் தொடர்ந்து அங்குள்ள குளத்தில் மொத்த ஆடையையும் களைந்து நிர்வாண குளியல் போடும் மியா, நிர்வாணமாகவே பாலைவனத்தில் சுற்றி திரிகிறார். மொத்தத்தில் பாலைவனத்தில் காதல் ஜோடி சந்திக்கும் திகில் சம்பவத்தை மையப்படுத்தி க்ளைமேக்ஸ் படம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. டிரெய்லர் முழுவதும் ஆபாச காட்சிகளே நிரம்பி வழிகின்றன.

மியா மல்கோவாவை வைத்து ஏற்கெனவே காட் செக்ஸ் ட்ரூத் என்ற படத்தை இயக்கிய ராம்கோபால் வர்மா, அந்த படத்திலும் மியாவை பல காட்சிகளில் நிர்வாணமாக காட்டியிருப்பார். இந்நிலையில், இன்று வெளியாகியுள்ள க்ளைமேக்ஸ் படத்தின் டிரெய்லரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet